சத்யன் – நித்யாவுக்கு காதல் மலர்ந்தது எப்படி? மனைவி பற்றி மனம் திறந்து பேசிய சத்யன்!
Singer Satyan and Nithya Love Marriage Story : ரோஜா ரோஜா என்ற பாடல் மூலமாக மீண்டும் டிரெண்டான பின்னணி பாடகர் சத்யன் மற்றும் நித்யாவிற்கு காதல் மலர்ந்தது எப்படி என்று பார்க்கலாம்.

ரோஜா ரோஜா என்ற பாடல் மூலமாக மீண்டும் டிரெண்டான பின்னணி பாடகர் சத்யன் மற்றும் நித்யாவிற்கு காதல் மலர்ந்தது எப்படி அவரே கூறியிருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம். கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்கு பிறகு ரோஜா ரோஜா என்ற பாடலை பாடிய பின்னணி பாடகர் சத்யன் மீண்டும் சமூக வலைதளங்கள் மூலமாக டிரெண்டாகியுள்ளார். அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். பின்னணி பாடகரான சத்யன் மகாலிங்கம் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரு மேடை நிகழ்ச்சியின் போது பாடிய பாடல் தான் இப்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. மேலும், திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலை பாடகரை தமிழ் சினிமா கொண்டாட தவறிவிட்டது என்று நெட்டிசன்கள் பலரும் கமண்ட் அடித்து வருகின்றனர்.
ரோஜா ரோஜா பாடலை சத்யன் பாடியதை பார்த்த பலரும், அது அவர் பாடிய பாடல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் காதலர் தினம் படத்தில் அப்பாடலை பாடியது உன்னி கிருஷ்ணன். சொல்லப்போனால் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட வேண்டும் என்பது சத்யனின் நீண்ட நாள் ஆசையாம். ஆனால் அவரின் அந்த ஆசை இதுவரை நிறைவேறாமலேயே உள்ளது. தமிழ் சினிமாவில் யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி இருக்கும் சத்யனுக்கு இதுவரை ஒருமுறை கூட ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
சத்யன் முதன்முதலில் பாடகராக அறிமுகமான படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். அதில் பரத்வாஜ் இசையில் ‘கலக்கப்போவது யாரு’ என்கிற பாடலை பாடி இருந்தார். இதையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையில் சரோஜா படத்தில் தோஸ்து படா தோஸ்து, பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் அட பாஸு பாஸு பாடல், கழுகு படத்தில் இடம்பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் பாடலான, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாடல், நேர்கொண்ட பார்வை படத்தில் தீ முகம் தான் தீம் பாடல், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மாற்றான் படத்தில் இடம்பெற்ற தீயே தீயே பாடல், துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற குட்டி புலி கூட்டம் பாடல் ஆகியவை சத்யன் பாடிய பாடல்கள் தான்.
சத்யனின் ரோஜா ரோஜா பாடல் டிரெண்டான பின் அவருக்கு சினிமாவில் பாட சான்ஸ் கொடுக்க வேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை 7000க்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பல திறமை வாய்ந்த பாடகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இசையமைப்பாளர்களே ஒவ்வொரு படத்திலும் இரண்டு, மூன்று பாடல்களை பாடிவிடுகிறார்கள். அப்படி இருக்கையில் சத்யனுக்கு மீண்டும் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக் குறி தான்.
இது ஒரு புறம் இருந்தாலும் அவர் பாடிய அந்த ரோஜா ரோஜா பாடல் நிகழ்ச்சியின் பின்னணி கோரஸ் பாடி நித்யா தான் இன்று அவரது மனைவி. இந்த நிலையில் தான் நித்யா மீதான காதல் பற்றி பேசிய சத்யன் கூறியிருப்பதாவது: அந்த நிகழ்ச்சியில் அப்போது தான் அவர் வந்திருக்கிறார். அந்நிகழ்ச்சியின் மூலமாக இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் அதன் பிறகு காதலர்களாக மாறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர், சத்யனின் இந்த வளர்ச்சிக்கு அவரது மனைவி நித்யாவும் ஒரு காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.