வீட்டை சுத்தி காட்டுறேன்னு கூட்டிட்டு போய் கற்பழித்தார்... பிரபல பாடகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
Singer Rahul Jain : ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் 30 வயது இளம்பெண் ஒருவர் பிரபல பாடகர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டின் முன்னணி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ராகுல் ஜெயின். இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் 30 வயது இளம்பெண் தான் ராகுல் ஜெயின் மீது ஓசிவரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியுள்ளதாவது : “பாடகர் ராகுல் ஜெயின் எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆனார். எனது ஆடை வடிவமைப்பு பணிகள் குறித்து பாராட்டி பேசிய ராகுல், ஒருகட்டத்தில் தனக்கான தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக என்னை நியமிக்க இருப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார்.
ஒருநாள் என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். வேலை சம்பந்தமாக பேச அழைத்திருப்பார் என நினைத்து மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ராகுலின் வீட்டுக்கு சென்றேன். அங்கு வீட்டை சுற்றி காட்டுகிறேன் எனக் கூறி என்னை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்ற ராகுல், என்னை பலாத்காரம் செய்தார். நான் தப்பிக்க முயன்ற போதும் என்னை கடுமையாக தாக்கினார்.
இதையும் படியுங்கள்... பிளாப் படங்களால் சம்பளத்தை குறைத்த தனுஷ்... திருச்சிற்றம்பலம் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?
கடந்த 11-ந் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை ராகுல் அழிக்கப் பார்க்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இளம்பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பாடகர் ராகுல் ஜெயின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும் அவரை இதுவரை கைது செய்யவில்லை.
மறுபுறம் தன்மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு புகாருக்கு பாடகர் ராகுல் ஜெயின் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த பெண் பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் ராகுல் கூறி உள்ளார். இதற்கு முன் இதேபோன்று ஒரு பெண் என்மீது பொய் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த பெண் அவரது கூட்டாளியாக இருப்பார் என்கிற சந்தேகம் உள்ளது. அந்த வழக்கில் எனக்கு சாதகமாக நீதி கிடைத்தது. தற்போது அதேபோல் மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என கூறியுள்ளார் ராகுல். இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... நயன்தாராவை விட அழகு நீங்க... விக்கியின் டுவிட்டால் மெர்சலாகிப் போன ஆர்த்தி - என்ன ரிப்ளை கொடுத்தாங்க தெரியுமா?