MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரு பாடலுக்கு 50 நாட்களா? சிம்பு ரசிச்சு... ருசிச்சு உருவாக்கிய மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தெரியுமா?

ஒரு பாடலுக்கு 50 நாட்களா? சிம்பு ரசிச்சு... ருசிச்சு உருவாக்கிய மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தெரியுமா?

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக கலக்கி வரும் சிம்பு, ஒரு பாடலை முடிக்க 50 நாட்கள் எடுத்துக் கொண்டாராம். அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 26 2025, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Simbu's Manmadhan Movie Song Secret
Image Credit : Facebook

Simbu's Manmadhan Movie Song Secret

சிறு வயதில் இருந்தே சினிமாவில் கலக்கி வருபவர் சிம்பு. இவர் நடிகராக மட்டுமின்றி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது நடிப்பில் பிசியாக இருக்கிறார். கடைசியாக சிம்பு நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பெரியளவில் கைகொடுக்காததால் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் சிம்பு தற்போது வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வட சென்னை யூனிவர்ஸில் வரும் என கூறப்படுவதால் அதன்மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் உள்ளது.

24
சிம்பு இயக்கிய படங்கள்
Image Credit : instagram/silambarasantrofficial

சிம்பு இயக்கிய படங்கள்

நடிகர் சிம்பு நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். அந்த வகையில் அவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் வல்லவன். அப்படம் கடந்த 2006-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. ஆனால் அப்படத்திற்கு முன்பே அவர் இயக்கியதாக கூறப்படும் மற்றொரு படமும் உண்டு. அதுதான் மன்மதன். இப்படத்தின் இயக்குனர் ஏஜே முருகன் என போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவருக்கும் சிம்புவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால், மன்மதன் படத்தின் சில காட்சிகளை சிம்புவே இயக்கினாராம்.

Related Articles

Related image1
தக் லைஃப் நாயகனின் தங்கமான மனசு; ஸ்டண்ட் மேன் ராஜு பேமிலிக்கு சிம்பு செய்த மிகப்பெரிய உதவி
Related image2
சிம்பு - வெற்றிமாறன் படம் டிராப் ஆனதா? காட்டுத்தீ போல் பரவும் தகவல் - உண்மை என்ன?
34
மன்மதன் பட பாடல் ரகசியம்
Image Credit : youtube

மன்மதன் பட பாடல் ரகசியம்

மன்மதன் படத்தில் சிம்பு இயக்கியதாக கூறப்படும் காட்சிகளில் காதல் வளர்த்தேன் பாடலும் ஒன்று. யுவன் சங்கர் ராஜா இசையில் நா முத்துக்குமார் வரிகளில் பாடகர் கேகே உருகி உருகி பாடிய இப்பாடலுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தப் பாடல் காட்சியை மட்டும் நடிகர் சிம்பு 50 நாட்கள் படமாக்கினாராம். தற்போதைய காலகட்டத்தில் 50 நாட்களுக்குள் ஒரு படத்தையே எடுத்து முடித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு பாடல் காட்சியை சிம்பு 50 நாட்கள் படமாக்கிய சம்பவத்தை ஓ மை கடவுளே, டிராகன் போன்ற படங்களின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

44
அஸ்வத் மாரிமுத்து சொன்னதென்ன?
Image Credit : our own

அஸ்வத் மாரிமுத்து சொன்னதென்ன?

தினமும் வேறொரு சீனை எடுக்க செல்லும்போதெல்லாம், காலையில் எங்கெல்லாம் நல்ல நல்ல லொகேஷன் இருக்கிறதோ, அங்கெல்லாம் படப்பிடிப்பை நடத்துவாராம். அப்போது அவர் டைரக்‌ஷன் பழகி வந்ததால், ரோப்பில் பறந்து பறந்து ஃபீல் பண்ணுவது போன்ற காட்சியையெல்லாம் எடுத்துப் பார்த்தாராம். இப்படி அவரின் இசை ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என அஸ்வத் கூறி இருக்கிறார். சிம்புவின் 51வது படத்தையும் அஸ்வத் தான் இயக்க உள்ளார். அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அப்படத்திற்கு காட் ஆஃப் லவ் என்றும் பெயரிட்டுள்ளார்கள். விரைவில் இதன் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிலம்பரசன்
தமிழ்ப் பாடல்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டைவர்ஸ் கொடுக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன்... ரோகிணி விரித்த வலையில் சிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Related Stories
Recommended image1
தக் லைஃப் நாயகனின் தங்கமான மனசு; ஸ்டண்ட் மேன் ராஜு பேமிலிக்கு சிம்பு செய்த மிகப்பெரிய உதவி
Recommended image2
சிம்பு - வெற்றிமாறன் படம் டிராப் ஆனதா? காட்டுத்தீ போல் பரவும் தகவல் - உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved