- Home
- Cinema
- கொரோனா காலத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்த ‘கொரோனா குமார்’ ஆக களமிறங்கும் சிம்பு.... ஷுட்டிங் எப்போ தெரியுமா?
கொரோனா காலத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்த ‘கொரோனா குமார்’ ஆக களமிறங்கும் சிம்பு.... ஷுட்டிங் எப்போ தெரியுமா?
கோகுல் இயக்கத்தில் சிம்பு (Simbu) நடிக்க உள்ள கொரோனா குமார் (Corona Kumar) படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்டதாக தயாராக உள்ளதாம்.

டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வரும் சிம்பு, தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.
இப்படம் மூலம் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றியை ருசித்துள்ள சிம்புவுக்கு, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அதிகரித்துள்ளது. மாநாடு படத்தின் வெற்றியால், இவர் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’, ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கும் ‘பத்து தல’, கோகுல் இயக்கத்தில் நடிக்கும் ‘கொரோனா குமார்’ போன்ற படங்களுக்கு கடும் டிமாண்ட் நிலவி வருகிறது.
இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் இப்படத்தில் நடித்து முடிக்க உள்ள சிம்பு, இதையடுத்து பத்து தல ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார். அப்படத்தின் பணிகளை ஒரே மாதத்தில் முடிக்க பிளான் போட்டுள்ள சிம்பு, வருகிற மார்ச் மாதம் கொரோனா குமார் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
கோகுல் இயக்கும் கொரோனா குமார் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்டதாக தயாராக உள்ளதாம். மேலும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.