MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Silambarasan: என் கதையை கேட்டுட்டு துப்பிட்டார் சிம்பு; பிரபல இயக்குனர் பகிர்ந்த ஷாக் தகவல்!

Silambarasan: என் கதையை கேட்டுட்டு துப்பிட்டார் சிம்பு; பிரபல இயக்குனர் பகிர்ந்த ஷாக் தகவல்!

பிரபல இயக்குனர், நடிகர் சிம்பு தன்னுடைய கதையை கேட்டு துப்பி விட்டதாக அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 18 2025, 02:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சுசீந்திரன் பற்றிய தகவல்:

சுசீந்திரன் பற்றிய தகவல்:

தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி பிரபலமான எஸ் டி சபா மற்றும் இயக்குனர் எழில் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு இயக்குனராக மாறியவர் தான் சுசீந்திரன். அந்த வகையில், 2009 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து வெளியான 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். 

25
சுசீந்திரன் இயக்கிய முதல் படம்

சுசீந்திரன் இயக்கிய முதல் படம்

இந்த திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், சுமார் 7 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதே போல் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் இந்த திரைப்படம் அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து சுசீந்திரன் இயக்கிய 'நான் மகான் அல்ல'  திரைப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட ஆக்ஷன் படங்களை பார்க்க நினைக்கும் ரசிகர்களுக்கு தீனி போடும் விதத்தில் அமைந்தது.

STR 49 படத்துக்காக குட்டி அனிருத் உடன் கூட்டணி அமைக்கும் சிம்பு!

35
தேசிய விருது திரைப்படம்:

தேசிய விருது திரைப்படம்:

அதே போல் சுசீந்திரன் 2011 ஆம் ஆண்டு எழுதி இயக்கிய 'அழகை சாமியின் குதிரை' திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. இந்த படத்தில் காமெடி நடிகர் அப்பு குட்டியை ஹீரோவாக வைத்து, சுசீந்திரன் ஹிட் கொடுத்திருந்தார். இதன் பின்னர், விக்ரமை வைத்து ராஜபாட்டை படத்தை இயக்கி தோல்வியடைந்தார். அதேபோல் ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, வில் அம்பு ,என அடுத்தடுத்து பல படங்களை இயக்கி வந்த சுசீந்திரன்... 'ஜீவா' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

45
2 கே லவ் ஸ்டோரி திரைப்படம்:

2 கே லவ் ஸ்டோரி திரைப்படம்:

இவர் இயக்கிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் அளவுக்கு இதுவரை வசூல் செய்யவில்லை என்றாலும், தயாரிப்பாளருக்கு மோசமான தோல்வியை கொடுத்ததில்லை. இந்த ஆண்டு இவருடைய முதல் திரைப்படமாக '2 கே லவ் ஸ்டோரி' திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவை வைத்து 'ஈஸ்வரன்' திரைப்படம் இயக்கும்போது, தனக்கு நேர்ந்த அனுபவத்தை பேட்டி ஒன்று சுசீந்திரன் கூறியுள்ளார்.

தேவையில்லாம மாட்டிக்காதடானு சிம்பு அப்பவே சொன்னாரு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

55
துப்பிட்டார் சிம்பு

துப்பிட்டார் சிம்பு

நடிகர் சிம்பு சுசீந்திரனை தேடி வந்து, தன்னை வைத்து ஒரு படம் இயக்குபடி கூறியுள்ளார். அந்த சமயத்தில் நடிகர் ஜெய்-க்காக சுசீந்திரன் 'ஈஸ்வரன்' என்கிற திரைப்படத்தின் கதையை எழுதி வந்தாராம். இந்த கதையை கேட்டதும் சிம்பு தூன்னு துப்பிட்டாராம். இதெல்லாம் ஒரு கதையா என்பது போல் சிம்பு யோசித்த நிலையில், பின்னர் இந்த கதையை அப்படியே சிம்புவுக்கு ஏற்ற போல் சில மாஸ் எலமெண்ட்ஸுடன் கூறிய போது, சிறப்பாக இருக்கிறது கண்டிப்பா இந்த படத்தை பண்றோம் என உறுதி அளித்துள்ளார். இதன் பின்னரே 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் பணிகள் துவங்கியதாக தன்னுடைய பேட்டியில் சுசீந்திரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image2
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Recommended image3
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved