“மாநாடு” ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு... நண்பர்களுடன் ஜாலியாக லூட்டி... ஸ்பெஷல் கெஸ்ட்டும் வந்திருக்கார்...!
தற்போது “மாநாடு” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சுசீந்திரன் - சிம்பு கூட்டணியில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ரசிகர்களின் ஏகபோக வரவேற்பையும் தாண்டி, குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குடும்பம், சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக வந்துள்ள இந்த திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இதில் அப்துல் காலிக் என்ற பெயரில் முஸ்லிம் இளைஞராக சிம்பு நடித்து வருவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
சென்னை, ஐதராபாத், பாண்டிச்சேரி என பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தின் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி தாறுமாறு வைரலானது. கையில் துப்பாக்கியுடன் அரசியல் மாநாட்டிற்குள் சிம்பு நிற்பது போன்ற அந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.
தற்போது “மாநாடு” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் அப்துல் காலிக் கெட்டப்பில் நடிகர் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம் ஜி ஆகியோருடன் சிம்புவும், அவருடைய நெருங்கிய நண்பரும் பிக்பாஸ் பிரபலமுமான மகத் உடன் இருக்கிறார்.
நண்பர்கள் மகத், பிரேம்ஜி உடன் ஜாலியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மாநாடு படத்தில் மகத்தும் சிம்புவுடன் நடிக்கிறாரோ? என கேள்வி எழுப்பியுள்ளனர்.