- Home
- Cinema
- BiggBoss Ultimate :கமலுக்கு பதில் சிம்பு... பிக்பாஸுக்காக வேறலெவல் கெட்-அப்புடன் ரெடியான STR- வைரலாகும் போட்டோ
BiggBoss Ultimate :கமலுக்கு பதில் சிம்பு... பிக்பாஸுக்காக வேறலெவல் கெட்-அப்புடன் ரெடியான STR- வைரலாகும் போட்டோ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரோமோ ஷூட்டில் நடிகர் சிம்பு கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேறலெவலில் வைரலாகி வருகிறது.

தமிழ் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.
இதில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தியும் (Suresh chakravathy), இரண்டாவது வார இறுதியில் சுஜா வருணியும் (suja varunee), மூன்றாவது வார இறுதியில் அபிநய் மற்றும் ஷாரிக் ஆகியோர் எலிமினேட் ஆகினர். மீதமுள்ள 10 பேருக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது. நேற்று வனிதாவும் வெளியேறியதால் தற்போது 9 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த 3 வாரங்களாக தொகுத்து வழங்கிய கமல், கடந்த வாரத்துடன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு காரணம் பணிச்சுமை தான். இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் (Kamal) அறிவித்தார்.
கமல் திடீரென விலகியதால் அவருக்கு பதில் யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. முதலில் ரம்யாகிருஷ்ணன் பெயர் அடிப்பட்டது. அவர் ஏற்கனவே ஒரு எபிசோடு தொகுத்து வழங்கியபோதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவருக்கு பதில் சிம்புவை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்பட்டது.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரோமோ ஷூட்டில் நடிகர் சிம்பு கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேறலெவலில் வைரலாகி வருகிறது. சிம்பு இடம்பெறும் பிக்பாஸ் புரோமோ இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Elon Musk Girlfriend: 50 வயதிலும் அடங்காத ஆசை.... 27 வயது நடிகையுடன் டேட்டிங் சென்ற எலான் மஸ்க்