கோலிவுட்டின் பாகுபலியாக மாறும் சிம்பு; STR 50 படத்தின் அடிபொலி அப்டேட் வந்தாச்சு!
நடிகர் சிம்பு இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் 50வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிம்புவின் 50வது படம்
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு தனி ரசிகர் படையையே உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. திரைத்துறையில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் சிம்பு இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவரின் 49-வது படம் குறித்த அப்டேட் நள்ளிரவில் வெளிவந்தது.
சிம்பு படங்களின் அப்டேட்
அதன்படி சிம்புவின் 49-வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளதாகவும் அப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் நடிகர் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார் என்பதையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே ரிவீல் செய்துவிட்டனர். இதற்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது.
இதையும் படியுங்கள்... ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு
இதையடுத்து ட்ரிபிள் டமாக்காவாக சிம்பு நடிப்பில் உருவாக உள்ள 50வது படத்தின் அறிவிப்பும் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி சிம்புவின் 50வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும், இதில் ஹைலைட் என்னவென்றால் இப்படத்தை ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக சிம்புவே தயாரிக்கவும் உள்ளார். இதற்கு முன்னர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து கமல் நிறுவனம் வெளியேறி உள்ளதும் உறுதியாகி இருக்கிறது.
சிம்பு 50 அப்டேட்
சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மனோஜ் பரமஹம்சா இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்ள இருக்கிறார். நடிகர் சிம்புவின் கெரியரில் ஒரு மைல்கல் திரைப்படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் இப்படத்தின் அப்டேட் வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... கைமாறிய STR 49! பர்ஸ்ட் லுக் இதோ