MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • குறும்படத்தில் இருந்து திருடி தான் அஜித் படத்தை எடுத்தாரா எச்.வினோத்? கிளம்பிய புது சர்ச்சை

குறும்படத்தில் இருந்து திருடி தான் அஜித் படத்தை எடுத்தாரா எச்.வினோத்? கிளம்பிய புது சர்ச்சை

ராஜேஷ் என்பவர் தான் இயக்கிய குறும்படத்தின் காட்சிகளை இயக்குனர் எச்.வினோத் திருடி அஜித் படத்தில் பயன்படுத்தி உள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 12 2023, 07:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித்துடன் கூட்டணி அமைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிவிட்டார். அதன்படி அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களையும் பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர் தான் தயாரித்து இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்றது. இதில் பிங்க் என்கிற இந்தி படத்தின் ரீமேக் ஆகும். இதையடுத்து இவர்கள் கூட்டணியில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. கடைசியாக அஜித் - எச்.வினோத் காம்போவில் வெளிவந்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பொங்கலுக்கு ரிலீசான இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!

34

இந்நிலையில், அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கிய வலிமை படம் ரிலீசாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆக உள்ள நிலையில், தற்போது அப்படம் மீது பரபரப்பு புகார் ஒன்று முன் வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ராஜேஷ் என்பவர், கடந்த 2019-ம் ஆண்டு இயக்கி வெளியிட்ட தங்க சங்கிலி என்கிற குறும்படத்தின் 10 காட்சிகளை எச்.வினோத் திருடி விட்டதாகவும், அந்த காட்சிகள் அனைத்தையும் அவர் அஜித்தின் வலிமை படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

44

இது தொடர்பாக பலமுறை முயற்சித்தும் இயக்குனர் எச்.வினோத்தை தொடர்புகொள்ள முடியாததால், ராஜேஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படம் ரிலீசாகி ஓராண்டு ஆக உள்ள நிலையில், அப்படத்தின் மீது ஒருவர் கதை திருட்டு புகாரை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னர் வலிமை படம் ரிலீசானபோதே மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் இதுபோன்று ஒரு புகாரை முன்வைத்து இருந்தார். அதற்கு இயக்குனர் எச்.வினோத் பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 'ஜெய் பீம்' நடிகர் மணிகண்டன் நடிக்கும் குறட்டையை மையப்படுத்தி தயாராகும் 'குட் நைட்'!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved