Breaking: படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு... லியோ பட நடிகர் சஞ்சய் தத்துக்கு பலத்த காயம்!
படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் குண்டு வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பலத்த காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sanjay Dutt
இயக்குனர் பிரேம் இயக்கத்தில், கன்னட நடிகர் துருவா சர்ஜா நடித்து வரும் 'கேடி' படத்தின் படப்பிடிப்பு, பெங்களூருவில் உள்ள மகடி சாலையில் படமாக்கப்பட்டு வந்தது. இதில் ஹீரோ துருவா சர்ஜா மற்றும் வில்லன் சஞ்சய் தத் ஆகியோர், மோதும் வெறித்தனமான சண்டை காட்சி படமாக்கப்பட்டது.
இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் ரவி வர்மா இயக்கி வந்தார். இந்த சண்டை காட்சியில் போது, படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. விறுவிறுப்பாக இந்த காட்சி எடுத்து வந்த போது, எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன்... சஞ்சய் தத்துக்கு மிகவும் பக்கத்திலேயே வெடித்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், சஞ்சய் தத்தின் முகம், கை மற்றும் முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதோடு, காயமடைந்த சஞ்சய் தத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள, முன்னணி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. எனினும் KD படக்குழு தரப்பில் இருந்து, இதுவரை இந்த தகவலை உறுதிசெய்யவில்லை.
இப்படம் சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட பீரியாடிக் ஃபிலிமாக எடுக்கப்பட்டு வருகிறது. சஞ்சய் தத்தை தவிர, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். சஞ்சய் தத் தளபதியின் லியோ படத்திலும், வில்லனாக நடித்து வரும் நிலையில், அவருக்கு திடீர் என இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுள்ள விஜய் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.