MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மேயாத மான் படத்தில் ஹீரோ - ஹீரோயினாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

மேயாத மான் படத்தில் ஹீரோ - ஹீரோயினாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

Meyaadha Maan: 'மேயாத மான்' திரைப்படத்தில், ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்க இருந்த நட்சத்திரங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 28 2026, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மேயாத மான்
Image Credit : twitter

மேயாத மான்

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், காதல், நட்பு கலந்த கலவையாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் “மேயாத மான்”. 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் எளிமையான கதைக்களத்தில், மிக குறைவான பட்ஜெட்டில் வெளியாகி இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. ரத்னா குமார் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை, கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

25
நடிகர் - நடிகைகள்:
Image Credit : twitter

நடிகர் - நடிகைகள்:

வைபவ் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் விவேக் பிரசன்னா, இந்துஜா ரவிச்சந்திரன், அருண் பிரசாத் மற்றும் அம்ருதா சீனிவாசன் போன்றோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷஃபிக் முஹம்மது அலி படத்தொகுப்பு செய்திருந்தார்.

35
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது:
Image Credit : our own

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது:

இந்த திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகி, வெற்றி பெற்றது. குறிப்பாக இந்துஜா மற்றும் விவேக்கின் நடிப்பு பாராட்டை பெற்றதோடு, பிரியா பவானி ஷங்கருக்கு சிறந்த அறிமுக படமாகவும் அமைந்தது. இப்படம் சில விருதுகளையும் வென்று குறித்து குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான்... இயக்குனர் ரத்னகுமார் 'மேயாத மான்' திரைப்படத்தில் நடிக்க இருந்த ஹீரோ ஹீரோயின் குறித்த தகவலை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

45
சாய் பல்லவி:
Image Credit : Instagram

சாய் பல்லவி:

'மேயாத மான்' திரைப்படத்தில் முதலில் நடிகர் ஜெய் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தான் முதலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இருவருக்குமே கதை மிகவும் பிடித்த போதிலும், எதிர்பாராத விதமாக படம் துவங்க இருந்த போது, பண மதிப்பிழப்பை அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த படம் நிறுத்தப்பட்டதாம்.

55
கால்ஷீட் கிடைக்காததால் நிகழ்ந்த மாற்றம்
Image Credit : our own

கால்ஷீட் கிடைக்காததால் நிகழ்ந்த மாற்றம்

பிரச்சனை சீரான பின்னர் அவர்கள் இருவரின் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே, வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோரை வைத்து மேயாத மான் படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
சினிமா காட்சியகம்
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்
சாய் பல்லவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai Today Episode : டபுள் கேம் ஆடும் சிந்தாமணி... கைதான மனோஜை மீட்பாரா ரோகிணி? சிறகடிக்க ஆசை
Recommended image2
திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி
Recommended image3
அடுத்தடுத்து 3 முக்கிய சீரியல்களை இழுத்து மூடும் சன் டிவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved