திரையுலகிற்கு குட்பை சொல்கிறாரா சமந்தா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சமந்தா சில காலம் திரையுலகை விட்டு விலக உள்ளேன் என கூறியுள்ளது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா, அதன் பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.
டோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் பிரபல குடும்பத்து மருமகளாகவே இருந்தாலும், சமந்தா சினிமாவை விட்டு விலகாமல் சரியான கதாபாத்திரங்களில் தூள் கிளப்பி வருகிறார்.
சமந்தாவின் கைவசம் சாகுந்தலம் என்ற தெலுங்கு படமும், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் மட்டுமே இருந்த நிலையில், இவ்விரு படங்களையும் நடித்து முடித்து விட்டார்.
சில இயக்குனர்கள் இவரை தேடி வந்து கதை கூறிய போதும், எந்த படங்களுக்கும் தற்போது வரை கால் சீட் கொடுக்காமல் உள்ளார். அதே போல், இவர் நடிப்பில் வெளியாகி, தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'தி ஃபேமிலி மேன் 2 ' வெப் சீரிசுக்காக இவருக்கு சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
ஏற்கனவே நடிகை சமந்தா திரையுலகை விட்டு விலக உள்ளதாக சில தகவல்கள் உலா வந்த நிலையில், தற்போது சமந்தாவே அதனை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒண்றில், சில காலம் திரையுலகில் இருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
எனவே சமந்தா தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகி விட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். சமந்தா மற்றும் அவருடைய கணவர் இருவரும், கோவாவில் இடம் ஒன்றை வாங்கி, அங்கு ஒரு பண்ணை வீடு கட்டி வந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடதக்கது.
சமந்தா சில காலம் திரையுலகை விட்டு விலக உள்ளேன் என கூறியுள்ளது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள போதிலும், பலர்... நன்றாக ஓய்வெடுங்கள், சீக்கிரம் நல்ல விஷயம் சொல்லுங்கள் என தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.