பிக்பாஸ் வரலாறில் முதல் முறையாக அணைத்து போட்டியாளர்களும் வெளியேற்றமா? ஏன்.. தீயாய் பரவிய தகவல்...!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, திடீர் என போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, வெள்ளக்காடாக மாறியுள்ளது.
அது மட்டுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு சுமார் 9 ஆயிரம் கன அடி வினாடிக்கு திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது நாம் அறிந்தது தான்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோ உள்ளேயும் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் அங்கு போடப்பட்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் உள்ளேயும் தண்ணீர் சென்றதால், போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
பலர் உடனடியாக தங்களை வெளியேற்றவேண்டும் என கேட்டு கொண்டதால், பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக... அணைத்து போட்டியாளர்களையும் வெளியேற்றி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சியாளர்கள் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.
தற்போது மழை நின்று விட்டதை அடுத்து, தண்ணீர் அனைத்தும் வெளியேற்றிய பின் அணைத்து போட்டியாளர்களும் மீண்டும் செட்டுக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தான் நேற்று ஒளிபரப்ப வேண்டிய பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு இன்று ஒளிபரப்பாக உள்ளதாம். ரியோவின் சண்டை குறித்த ப்ரோமோ நேற்றே வெளியானாலும் அந்த குறித்த விவரம் இன்றைய எபிசோடில் தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.