நடிகை த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு..! கட்டோடு வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!
நடிகை த்ரிஷா காலில் கட்டுடன், வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படத்தை கண்டு அவரது ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு? என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுமார் 15 வருடங்களுக்கு மேலாக கோலிவுட் மற்றும் கோலிவுட் திரை உலகில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. நயன்தாராவை போல், இவர் கதையின் நாயகியாக நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெறாவிட்டாலும், சமீபத்தில் குந்தவையாக த்ரிஷா நடித்திருந்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மெகாஹிட் வெற்றி பெற்றதோடு, சுமார் 500 கோடி வசூல் சாதனை படைத்தது.
முதல் பாகத்திலேயே, இந்த படத்திற்கு முதலீடு செய்த லைக்கா நிறுவனத்திற்கு இந்த படம் லாபகரமாக அமைந்துள்ள நிலையில், இன்று 'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்பட்டது.
'D3 'படத்தில் நிர்வாணமாக நடித்தேன்..! கதாநாயகனாக மாறிய விஜய் டிவி சீரியல் நடிகர் பிரஜின் பேச்சு!
இதில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம், போன்ற நடிகர்கள் கலந்து கொண்ட போதிலும்... நடிகைகள் ஒருவர் கூட கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் த்ரிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக த்ரிஷா வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதை அடுத்து வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது
தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படிவீட்டில் ஓய்வு எடுத்து வரும் த்ரிஷா, இந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு தெரிவிக்க, ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருவதோடு.. விரைவில் பூரண குணமடைய தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.