பற்றி எரியும் சமந்தாவின் விவாகரத்து விவகாரம்.!! இப்படி ஒரு அதிரடி முடிவா? ஆடி போன ரசிகர்கள்..!!
நடிகை சமந்தா (samantha) - நாகசைத்தாயா (Naga Chaitanya) விவாகரத்து விவகாரம் குறித்து நாக சைதன்யா மவுனம் களைத்த, பிறகும் சமந்தா இதுகுறித்து எதுவும் கூறாத நிலையில், தற்போது சமந்தா அதிரடியாக விவாகரத்து (Divorce) கேட்டு நீதி மன்றம் நாடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக எரிந்து வருகிறது.
Samantha
கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல், தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இருவருமே அமைதி காத்து வந்தனர்.
இந்நிலையில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா, பிரபல ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், நான் சிறிய வயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் கடைபிடித்து வருகிறேன்.
சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி பரபரப்பாக பேசப்படும், முந்தையநாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இதுகுறித்து கவலைப்படுவதே நிறுத்தி விட்டேன்’ என்று கூறி இருந்தார்.
ஆனால் இதுகுறித்து தற்போது வரை சமந்தா ஒரு வார்த்தை கூறி, இது வதந்தி என்பதை கூட கூறவில்லை. எனவே சமந்தா - நாக சைதன்யாவிற்கும் பிரச்சனை இன்னும் புகைந்து கொண்டு தான் உள்ளது சில சில தகவல்களும் பரவி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது சமந்தா விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை நாட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத நிலையில், ரசிகர்கள் சமந்தா இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுவதை கேள்வி பட்டே ஆடி போய் உள்ளனர். எது எப்படி இருந்தாலும் மனதில் பட்டத்தை பளீச் என பேசும் சமந்தா, விவாகரத்து குறித்த தகவலுக்கும் விரைவில் பதிலளிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.