உன் மூஞ்சிய பார்த்தாலே காண்டாகுது... அசிங்கப்படுத்திட்ட... ஷிவானியை வெளுத்து வாங்கிய அவரது அம்மா!
First Published Dec 30, 2020, 12:58 PM IST
பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்றய தினம் ஆராரோ ஆரிரரோ பாடல் ஒளிபரப்ப... ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அம்மாவை பார்த்ததுமே கண்கலங்கி பாத்ரூமில் இருந்து ஓடி வந்த கட்டி பிடித்து தன்னுடைய பாசத்தை கொட்டினார் ஷிவானி. உள்ளே வந்ததும் பாசத்தை காட்டிய ஷிவானியின் அம்மா அகிலா பின்பு தான் மகளை தனியாக பேச வேண்டும் என அழைத்து வெளுத்து வாங்கினார்.

எடுத்ததுமே எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்த... நீ இந்த வீட்டுக்குள்ள பண்ணிக்கிட்டு இருக்குறதெல்லாம் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா? என கேட்டதுமே ஷிவானி ஆடி போய்விட்டார். ஒருத்தன் பின்னாடியே சுத்திக்கிட்டே இருக்க தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தியா? என காரசாரமாக பேச துவங்கினார்.

என்ன சொல்லிட்டு வந்த, அவ முன்மொழியிறதை வழி மொழிஞ்சிட்டு இருக்க. அப்பா இந்த ஷோ பாப்பாங்க, சொந்தகாரவங்க எல்லாம் பாப்பாங்கனு நினைச்சி பார்த்தியா? ஒரு கேம் கூட தனியா விளையாடுறியா என மனதில் உள்ள கோவத்தை எல்லாம் கொட்டி தீர்த்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?