MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மை நியூ “Beast”... சொகுசு கார் வாங்கிய ஷிவானி! செம்ம கெத்தாக வெளியிட்ட புகைப்படத்துக்கு குவியும் வாழ்த்து!

மை நியூ “Beast”... சொகுசு கார் வாங்கிய ஷிவானி! செம்ம கெத்தாக வெளியிட்ட புகைப்படத்துக்கு குவியும் வாழ்த்து!

சீரியல் நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ஷிவானி தனக்கு மிகவும் பிடித்தமான 'BMW ' கார் ஒன்றை வாங்கி, அதன் முன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு... தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதற்க்கு ஷிவானியின் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தற்போது தெரிவித்து வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 13 2021, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஷிவானி சீரியல்கள் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது வெள்ளித்திரை பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அதிக முனைப்பு காட்டி வருகிறார். சில இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வந்தாலும், மனதிற்கு பிடித்த கதையையும், நல்ல கருத்துள்ள படங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என கண்ணும் கருத்துமாக செயல் பட்டுவருகிறார்.

26

இதற்காக இவர், திரையுலகை சேர்ந்த சில நண்பர்கள் கூடவும் நிறைய ஆலோசனை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே தான் கடந்த சில மாதங்களாக, கண்ணை கட்டும் அளவுக்கு கவர்ச்சியை வாரி இறக்காமல், அளவான கவர்ச்சியை ரசிக்கும் படி காட்டி வருகிறார்.

36

முன்பை விட இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பின்னர் வெளியிடும் புகைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகிறது.

46

மேலும் அவ்வப்போது, தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்கள், மற்றும் அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வசீகரித்து வருகிறார்.

56

இந்நிலையில் தற்போது ஷிவானியின் நீண்ட நாள் ஆசையும், கனவும் இன்று நிறைவேறியுள்ளது. இவர் வாங்க வேண்டும் என ஆசைப்பட்ட BMW7series காரை வாங்கியுள்ளார். 

66

செம்ம கெத்தாக தன்னுடைய புதிய கார் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார். தன்னுடைய கார் தான் என்னுடைய நியூ 'பீஸ்ட்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏன் முடங்கியது ஜன நாயகன்?" - கிடப்பில் போடப்பட்ட படம்; விடிவுகாலம் எப்போது? ஒரு சிறப்புப் பார்வை!
Recommended image2
Top 10 Serial TRP : அதளபாதாளத்தில் எதிர்நீச்சல்; அடிவாங்கிய அய்யனார் துணை - இந்த வார டாப் 10 சீரியல் இதோ
Recommended image3
Hansika Divorce : ஒரு ரூபாய் கூட ஜீவனாம்சம் வாங்காத ஹன்சிகா - காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved