உடை மாற்றும் போது உள்ளே வந்த இயக்குநர் - ஷாலின் பாண்டே பகிர்ந்த சீக்ரெட்ஸ்!
'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற ஷாலினி பாண்டே, தனது திரையுலக வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அனுமதியின்றி அல்லது எந்த அறிவிப்பையும் கொடுக்காமல் அவர் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, இயக்குனர் உள்ளே நுழைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட சில முக்கிய படங்கள் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. இப்போது, ஷாலினி பாண்டே திரைக்குப் பின்னால் நடந்த ஒரு சம்பவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சில கெட்டவர்களுடனும் பணியாற்றியுள்ளேன்:
இந்த சம்பவத்தை ஷாலினி பாண்டே ஃபிலிமிக்யானுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். என்னுடைய திரைப்பட வாழ்க்கையில், நான் எத்தனை நல்லவர்களுடன் பணியாற்றி உள்ளேனோ, அதே அளவுக்கு சில கெட்டவர்களுடனும் பணியாற்றியுள்ளேன்.
டிரஸ் மாற்ற கூட ரூம் இல்ல.. ஆண்களுடன் ரூமில் தங்கி இருந்தேன்.. அர்ஜுன் ரெட்டி நடிகை ஷாலினி பாண்டே!
எனக்கு எந்த திரைப்பட பின்னணியும் இல்லை:
எனக்கு எந்த திரைப்பட பின்னணியும் இல்லை. அதுதான் என் திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள். நான் ஒரு தென்னிந்தியப் படம் பண்ணிக்கிட்டிருந்தேன். இந்த நேரத்தில், நான் வேனில் உடை மாற்றிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இயக்குனர் நேராக என் அறைக்கு வந்தார். அனுமதி இல்லை, குறைந்தபட்சம் வேன் கதவைத் தட்டாமல் நேராக உள்ளே வந்தார். அவர் வேண்டுமென்றே அப்படி செய்தார்.
அப்போது 22 வயது:
இயக்குனர் அறைக்குள் நுழைந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். எனக்கு அப்போது 22 வயதுதான். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கோபமடைந்து, இயக்குனரை உரத்த குரலில் வெளியேறச் சொன்னேன். என்னுடைய அலறல் வேனில் மட்டுமல்ல, படப்பிடிப்புத் தளத்திலும் கேட்டது. இயக்குனர் மிகவும் சங்கடப்பட்டதாக ஷாலினி பாண்டே கூறினார்.
இயக்குனருக்கு எதிராக மாறினேன்:
படப்பிடிப்புத் தளத்தில் இருந்த சிலர் வந்து விசாரித்தனர். ஆனால் யாரும் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இந்த விஷயத்தில், இயக்குனருக்கு எதிராக மாறினேன் என்பதையும் புரிந்துகொண்டேன். அப்போதுதான் நான் சில முக்கியமான முடிவுகளை எடுத்தேன். அதிர்ஷ்டவசமாக, எனக்கு இன்னும் சில வாய்ப்புகள் கிடைத்தன," என்று ஷாலினி பாண்டே கூறினார்.
பிளாக் அண்ட் ஒயிட்டில் போல்ட் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே..வைரல் போட்டோஸ் இதோ!
அதிர்ஷ்டவசமாக வாய்ப்புகள் கிடைத்தன:
நீங்கள் இயக்குனரை எதிர்த்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் அதிர்ஷ்டவசமாக, எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. என ஷாலினி பாண்டே கூறியுள்ளார்.