MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ShahRukh khan : பீஸ்ட் டிரைலர் பார்த்து மெர்சலான ஷாருக்கான்... ஒரே டுவிட்டில் முடிவுக்கு வந்த சர்ச்சை

ShahRukh khan : பீஸ்ட் டிரைலர் பார்த்து மெர்சலான ஷாருக்கான்... ஒரே டுவிட்டில் முடிவுக்கு வந்த சர்ச்சை

ShahRukh khan : அட்லீயைப் போலவே நானும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன் என பதிவிட்டுள்ள ஷாருக்கான், பீஸ்ட் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 06 2022, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய்யின் பிகில் படத்துக்கு பின்னர் இயக்குனர் அட்லீக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஷாருக்கான் படம். இந்தியில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன்மூலம் அவர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மேலும் பிரியாமணி, யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

24

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு ஷாருக்கான் மகன் போதை வழக்கில் சிக்கியபோது இதன் ஷூட்டிங்கும் தடைபட்டது. மகனை எப்படியாவது வழக்கில் இருந்து மீட்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்த ஷாருக்கான் இப்படத்தை கிடப்பில் போட்டார். இதையடுத்து இப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததால், இப்படம் கைவிடப்பட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவத் தொடங்கின.

34

ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு டுவிட் ஒன்றை போட்டுள்ளார் ஷாருக்கான். அதில் அவர் கூறியிருப்பதாவது: “அட்லீயைப் போலவே நானும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன். பீஸ்ட் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். டிரைலர் பவர்புல்லாக இருக்கிறது” என ஷாருக்கான் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

44

இந்த டுவிட்டுக்கு நன்றி சொல்லி இயக்குனர் அட்லீ போட்டுள்ள டுவிட்டில், “என்னோட அண்ணன், என்னோட தளபதி, விஜய் அண்ணாவின் பீஸ்ட் ஏப்ரல் 13-ல் வருகிறது. உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கு நன்றி ஷாருக்கான் சார். உங்களின் அன்புக்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அட்லீ - ஷாருக்கான் படம் கைவிடப்படவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... Thalapathy 66 : விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா... பூஜையுடன் தொடங்கியது தளபதி 66 - வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரேவதியை பழிவாங்க துடிக்கும் சந்திரகலா! கார்த்திக்கின் காதலர் தின சர்ப்ரைஸ்; கார்த்திகை தீபம் சீரியலில் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
காதலர்கள் விரும்பும் டாப் 10 ஹிட்ஸ்.! எல்லா காலத்திலும் இளசுகள் விரும்பும் இசை பொக்கிஷம் இதுதான்.!
Recommended image3
சிறைக்கு செல்லும் ரேவதி? ஆதிரை குடும்பத்தில் அடுத்த பூகம்பம்! அன்பு வடிவின் சதி அம்பலமாகுமா? இன்றைய மெகா அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved