- Home
- Cinema
- அட்லீ இயக்கத்தில் ஷாருகான் - நயன்தாரா நடிப்பது 'மணி ஹெய்ஸ்ட்' ரீமேக்கா? தீயாக பரவும் தகவல்!!
அட்லீ இயக்கத்தில் ஷாருகான் - நயன்தாரா நடிப்பது 'மணி ஹெய்ஸ்ட்' ரீமேக்கா? தீயாக பரவும் தகவல்!!
இயக்குனர் அட்லீ 'பிகில்' படத்தை தொடர்ந்து, ஷாருக்கான் மற்றும் கோலிவுட் சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இயக்கி வரும் திரைப்படமும், சூப்பர் ஹிட் வெப் சீரிஸின் ரீமேக் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் மிகவும் நடந்து வருவது நாம் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் நடிகை நயன்தாரா, தன்னுடைய அம்மா மற்றும் காதலர் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பூனேவில் இருந்து சென்னை திரும்பினார். சமீபத்தில் இவர் தன்னுடைய நிச்சயதார்த்த தகவலை உறுதி செய்த நிலையில், விரைவில் திருமண அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அட்லீ இயக்கும் திரைப்படம் 'மணி ஹெய்ஸ்ட்' கிரைம் வெப் தொடரின் ரீமேக் என்கிற தகவல் அசரால் புரசலாக வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கம் படத்திலும், ஒரு வங்கியை ஹீரோ கொள்ளை அடிக்கும் கதையம்சம் கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வலம் வருகிறது. ஏற்கனவே இதுபோன்ற கதை ஒன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற டைட்டிலில் வெளிவந்த நிலையில் அந்த கதையின் இந்திய உரிமையை ஷாருக்கான் வாங்கி உள்ளதாகவும் அந்தக் கதையைத்தான் அட்லி தனது பாணியில் டெவலப் செய்து 'லயன்' என்ற திரைப்படமாக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிகை ப்ரியா மணி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.