- Home
- Cinema
- Jersey movie : விடாது கருப்பாய் துரத்தும் corona!! வேறவழியின்று பிரம்மாண்ட படத்தின் ரிலீஸை தள்ளிவச்ச படக்குழு
Jersey movie : விடாது கருப்பாய் துரத்தும் corona!! வேறவழியின்று பிரம்மாண்ட படத்தின் ரிலீஸை தள்ளிவச்ச படக்குழு
ஒமைக்ரான் (Omicron) அச்சுறுத்தல் காரணமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள பிரபல நடிகருடைய படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா என்கிற கொடிய வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பரவியது.
2020-ம் ஆண்டு கொரோனா வைரஸின் முதல் அலை பரவி ஓய்ந்த நிலையில், இந்த ஆண்டு மத்தியில் இரண்டாவது அலை வேகமாக பரவியது. பின்னர் படிப்படியாக இதன் பாதிப்பு குறைந்தது.
அனைத்து நாடுகளும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக 22 மாநிலங்களில் ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக புதிதாக ரிலீசாக இருந்த படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்தியில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள ஜெர்சி (Jersey) படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ஷாகித் கபூர் (Shahid Kapoor) ஹீரோவாக நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.
இப்படம் டிசம்பர் 31-ந் தேதி உலகமெங்கும் ரிலீசாக இருந்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். புது ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் இப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியிடப்படும் எனவும் ஓடிடி ரிலீஸ் என பரவும் தகவல் பொய்யானது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.