சிறையில் இருந்து வெளியே வந்த ஷாருகான் மகன் ஆர்யன் கானுக்கு மேளதாளத்தோடு வரவேற்பு கொடுத்த ரசிகர்கள் !!
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh khan) மகன் ஆர்யன் கானுக்கு பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் அக்டோபர் 28 ஆம் தேதி ஜாமீன் கிடைத்த நிலையில், மூன்று வாரங்களுக்கு பின்னர் பின்னர் இன்று ஆதார் சாலை சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு ஷாருகானின் ரசிகர்கள் உச்சாக வரவேற்பு கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை மருந்து பார்ட்டி கொண்டாடியதாக, அக்டோபர் 3 ஆம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், ஷாருகான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஆர்யன் கான் ஆதார் சாலை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருகிறார்.
அக்டோபர் 8 ஆம் தேதி மும்பை ஆதார் சாலை சிறையில் அடிக்கப்பட்ட ஆர்யன் கானுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
NCB தரப்பில் இருந்து தொடர்ந்து ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்குவதில் அச்சோபனை தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு வழியாக உச்ச நீதி மன்றத்தை நாடி ஷாருகான் தன்னுடைய மகனுக்கு ஜாமீன் பெற்றார்.
ஆசையாக வளர்த்த மகன் சிறையில் தவிப்பதை, ஷாருகான் கேள்விப்பட்டதில்லை இருந்தே, தன்னுடைய தூக்கத்தையும், உணவையும் முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்து விட்டார்.
அவ்வப்போது காபி, டீ, போன்ற பானங்களை மட்டுமே அருந்தி வந்த நிலையில்... மகனுக்கு ஜாமீன் கிடைத்த பின்னரே நிம்மதி அடைத்தார். குறுநகையுடன் மகனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படமும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
நேற்றைய தினமே ஆர்யன் கான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜாமீன் பெறுவதற்காக ஒப்புதல் விண்ணப்பம் சிறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், நேற்றைய தினம் ஆர்யன் கான் வெளியே வரமுடியவில்லை.
இந்நிலையில் இன்று காலை ஆதார் சாலை சிறையில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு ஆர்யன் கான் 3 வாரங்களுக்கு பின் காரில் சென்றார். அவரை ஷாருகானின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி வரவேற்றனர்.
குறிப்பாக மேளம் தாளம், பட்டாசுகள் வெடித்து... ஷாருகான் மகன் ஆர்யன் கானை வரவேற்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.