ஷாருக்கானின் புதிய முயற்சி .. இணையதளத்தில் கலக்கும் ஷாரூக்..
ஷாரூக் கான் தனது புதிய முயற்சியாக ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது குறித்து அறிவித்த ஷாரூக் உங்களுக்கான பார்ட்டி என குறிப்பிட்டுள்ளார்.

Shah Rukh Khan
ஷாருக்கான் (shah rukh khan) பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர். சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் ரசிகர்களின் மனதை வென்றெடுத்த ஷாரூக். திடீர் சறுக்கலுக்கு சென்றார்.
Shah Rukh Khan
இவர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஒராண்டு இடைவெளிக்கு பின் பதான் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
Shah Rukh Khan
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே (deepika padukone) மற்றும் முக்கிய வேடத்தில் ஜான் ஆபிரஹாம் நடித்துள்ளனர். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Shah Rukh Khan
பதான் படத்தை தொடர்ந்து விஜயின் பேவரைட் இயக்குனர் அட்லீயுடன் காய் கோர்த்துள்ளார் ஷாரூக் கான். இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். லயன் என பெயரிடப்பட்டு உள்ள இப்படம் குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Shah Rukh Khan
இதற்கிடையே ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைதானார். தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள ஆர்யன் கானின் மீது முழு கவனத்தையும் செலுத்தி வரும் ஷாரூக் அட்லீ படப்பிடிப்பு குறித்து எந்த க்ரீன் சிக்னலும் காட்டாமல் உள்ளார்.
Shah Rukh Khan
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் ஐபிஎல் -ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வாங்கியது. SRK அதன் தொடக்கத்திலிருந்தே அணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார். அந்த அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றது.
Shah Rukh Khan
ஷாருக் உரிமையாளராக இருப்பது KKR மகத்தான புகழ் பெற உதவியது. இந்த முறை ஐபில் வீரர்களை ஏலம் எடுக்க ஆர்யன் கானை முன்னிறுத்தியிருந்தார் ஷாரூக் .
Shah Rukh Khan
தற்போது திரையரங்குகளை காட்டிலும் ஓடிடி தளங்களில் தான் பிரபலங்களின் படங்கள் வெளியாகி வருகிறது. இதை கருத்தில் கொண்ட ஷாரூக் கான் தனது புதிய முயற்சியாக ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது குறித்து அறிவித்த ஷாரூக் உங்களுக்கான பார்ட்டி என குறிப்பிட்டுள்ளார்.