22 வருடத்திற்கு பிறகு விஜயுடன் கைகோர்த்த ஷ்யாம்..முந்தைய சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
விஜய் 66 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்யாம் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னரே இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

vijay 66
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் 66 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
vijay 66
விஜயின் புதிய படத்தில் புஷ்பா நாயகி ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
vijay 66
சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் துவங்கியது.நான்கு நாட்கள் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் 20 நாட்கள் நடைபெற உள்ளது.
Vijay 66
அரபி குத்து பாடலின் வெற்றியை அடுத்து விஜய் 66 படத்தின் முதல் பாடலும் அதே செட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இது விஜயின் ஆசை என்றும் சொல்லப்படுகிறது.
vijay 66
இந்த படத்தில் விஜய்க்கு பிரபல நடிகர் சரத்குமார் தந்தையாக நடிக்க உள்ளதாகவும் விஜய்க்கு இரண்டு அண்ணன்கள் இருப்பது போன்ற கதை அமைப்பு என்று சொல்லப்படுகிறது.
vijay 66
விஜய்க்கு அண்ணனாக நடிக்க முன்னணி நடிகர்களை படக்குழு தேடி வரும் நிலையில் நடிகர் ஷ்யாம், விஜய் அறுபத்தி ஆறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.
vijay 66
ஷ்யாம் - விஜய் இருவரும் ஏற்கனவே ஹிட் கொடுத்த குஷி படத்தில் நடித்துள்ளன.ர் எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி படத்தில் விஜய்க்கு நண்பனாக ஷ்யாம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.