'ராஜா ராணி' சீரியல் பிரபலம் ஸ்ரீதேவிக்கு குழந்தை பிறந்தாச்சு..! குவியும் வாழ்த்து..!
'ராஜா ராணி', 'கல்யாண பரிசு' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமான, சீரியல் நடிகை ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை வெளியிட்டுள்ளார்.
வெள்ளித்திரை நாயகிகளுக்கு நிகராக தற்போது சின்னத்திரை நாயகிகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார். மேலும், திருமணம், மற்றும் குழந்தை பெற்ற பிறகும் மீண்டும் நடிக்க வந்தாலும் அதிக ரசிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல், சின்னத்திரை மற்றும் சில வெள்ளித்திரை படங்களிலும் நைட்த்துள்ளவர் ஸ்ரீதேவி.
ற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, அசோக் சின்தலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, அதாவது காதலர் தினத்தன்று கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதுற்குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இவர் பதிவிட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை ஸ்ரீதேவி - அசோக் தம்பதிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள்.