- Home
- Cinema
- இந்த மனசுதாங்க கடவுள்... விஜய் டிவி சீரியல் நடிகை சரண்யாவின் செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
இந்த மனசுதாங்க கடவுள்... விஜய் டிவி சீரியல் நடிகை சரண்யாவின் செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது', 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' , ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் சரண்யா. பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில், 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஆயுத எழுத்து' போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தலை தூக்கி உள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசித்து வரும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அன்றாட உணவிற்கு கூட வழி இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

இப்படி பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில், சில பெண்களின் உதவியோடு சமைத்து, கஷ்டப்படுபவர்கள் வீட்டிற்கு தானே சென்று சாப்பாடு பொட்டிலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகிறார்.

இவரது சேவை மனப்பான்மையை அறிந்து, பலர் பணமாகவும், காய் கறிகள், அரிசி, போன்ற பொருட்களை கொடுத்து உதவி வருகிறார்களாம்.

அதே நேரத்தில், இவரது இந்த செயலுக்கு கணவர், பெற்றோர், மற்றும் நண்பர்கள் முழு ஒத்துழைப்பு தருவதால் முழுமையாக இந்த பணியை செய்ய முடிகிறது என கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவிலும் இவர் போட்டுள்ள பதிவிற்கு... இந்த மனசு தான் கடவும், உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தன்னுடைய வயதான பெற்றோரை பார்த்து கொள்வதற்காக, சீரியலில் இருந்து விலகி வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில், இந்த பணி மன மகிழ்ச்சியை தருவதாக கூறுகிறார் சரண்யா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.