'செம்பருத்தி' சீரியலில் இனி கார்த்திக்கு பதில் இவர் தான் ஹீரோவா? இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..!
செம்பருத்தி சீரியலில் இருந்து நடிகர் கார்த்தி வெளியேறியதாக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், யார் புதிய ஹீரோ என்பது குறித்த தகவல் அரசால் புரசலாக கசிந்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது செம்பருத்தி சீரியல் மட்டுமே. இல்லதரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினர் கூட இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது செம்பருத்தி சீரியல் மட்டுமே. இல்லதரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினர் கூட இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர்
இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி சமீபத்தில் திடீரென நீக்கப்பட்டார். சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்காக ஜனனி யூ-டியூப் நேரலையில் கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் ஹீரோவான கார்த்தியும் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக டி.வி. நிர்வாகம் இதுகுறித்த அறிவிப்பை நேற்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது.
தற்போது 800 எபிசோடுகளை தாண்டி இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த 9 நாட்களாக கார்த்தியின் கதாபாத்திரத்தை வெளியே காட்டாமல், துணை கதாபாத்திரங்களை மட்டுமே காண்பித்து வந்தது ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது.
கார்த்தி வெளியேறியதாக அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அதில், இந்த தொடரை வெற்றியடை வைத்த ரசிகர்களுக்கு நன்றி. தனது அர்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் செம்பருத்தி சீரியலை மாபெரும் வெற்றியடைந்த வைத்த நடிகர் கார்த்திக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என டிவி நிர்வாகம் தெரிவித்தது.
மேலும் அவருடன் பணியாற்றிய காலங்கள் மிகவும் மகிழ்ச்சியானது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கார்த்தி செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். ஜீதமிழ் உடனான அவரது தொடர்பு மேலும் நீடிக்கும் அவரது பயணத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.
வெற்றிகரமான சூப்பர் ஹிட் சீரியலில், ஹீரோ வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதில்... இந்த சீரியலில் நடிக்க உள்ளவர் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.
பிரபல ஊடகம் ஒன்றில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர், வி.ஜே. அக்னி தான் கார்த்திக்கு பதிலாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஒருவேளை அக்னி ஹீரோவாக மாறினால் இந்த யாருமே எதிர்பார்க்காத ஒன்றாகவே இருக்க கூடும்.
ஆனால் இந்த தகவல் தற்போது வரை உறுதி செய்யாதபட நிலையில், விரைவில் இது குறித்து டிவி நிர்வாகம் உண்மை தகவலை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.