- Home
- Cinema
- ரயிலில் டிக்கெட் இல்லாமல் டிசி-யிடம் சிக்கிய சாவித்திரி; பணம் கொடுத்து உதவிய நடிகை யார் தெரியுமா?
ரயிலில் டிக்கெட் இல்லாமல் டிசி-யிடம் சிக்கிய சாவித்திரி; பணம் கொடுத்து உதவிய நடிகை யார் தெரியுமா?
நடிகை சாவித்திரி ட்ரைன் டிக்கெட்டை பெற மறந்த நிலையில், அவரின் இக்கட்டான சூழலில் அவருக்கு பிரபல நடிகை ஒருவர் தான் உதவியுள்ளார். அவர் யார் என்பது பற்றி பார்போம்.

பழம்பெரும் நடிகை சாவித்ரி சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தியவர். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த நடிகை சாவித்ரி 1950ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் குயீன் என்றும் அழைக்கப்பட்டார்.
திரையுலகின் உச்சத்தில் இருந்தவர்:
திரையுலக வாழ்க்கையிலும், வசதி வாய்ப்பிலும் எவ்வளவு உயரத்தில் இருந்தாரோ அதே அளவிற்கு கஷ்டமும் பட்டுள்ளார். இளகிய மனம் கொண்ட நடிகை சாவித்திரி பலருக்கு வாரி வாரி கொடுத்த நிலையில், அவர் கஷ்டப்படும் போது அவர் நம்பி இருந்தவர்களே இவருக்கு கைகொடுக்காமல் போனது தான் சோகத்தின் உச்சம்.
நடிப்பால் அசரடித்த சாவித்ரி; இயக்குனர் அவதாரம் எடுத்த ஒரே படம் எது தெரியுமா?
டிக்கெட்டை மறந்து வந்ததால் ஏற்பட்ட பிரச்சனை:
சமீபத்தில் கே.விஜயா, சாவித்ரியின் நல்ல குணத்தைப் பற்றியும், அவருக்கு தான் தக்க சமயத்தில் உதவி செய்தது குறித்தும், பகிர்ந்து கொண்டுள்ளார். சாவித்திரி பற்றி அவர் பேசும் போது... "ஒருமுறை சாவித்திரி பயணம் செய்த ரயிலில், கே விஜயாவும் பயணம் செய்தாராம். விஜயவாடாவிலிருந்து சென்னைக்குப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாவித்ரியும் அவரது உதவியாளரும் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறியுள்ளனர். டிசி வந்து டிக்கெட் கேட்டபோது, சாவித்திரி தன்னிடம் டிக்கெட் இருப்பதாக நினைத்து உதவியாளரிடம் கேட்க, நிகழ்ச்சியாளர்கள் ரயில் டிக்கெட் புக் பண்ணியதால், அவர்களிடம் இருந்து டிக்கெட் பெறாமல் ரயிலில் ஏறியது பற்றி உதவியாளர் கூறி உள்ளார்.
தக்க சமயத்தில் உதவிய கே விஜயா:
டிசி சாவித்ரியிடம் டிக்கெட்டைக் காட்டச் சொல்லி உள்ளார். அல்லது பணம் செலுத்த கூறியுள்ளார். அல்லது அடுத்த நிலையத்தில் இறங்கும்படி கூறியுள்ளார். தன்னுடைய நிலை பற்றி சாவித்திரி டிசிக்கு விளக்கி கூறி கொண்டிருந்த நேரத்தில், சாவித்திரியின் குரலை அடையாளம் கண்டு கொண்ட, விஜயா அது சாவித்ரி என்பதை உணர்ந்து உடனடியாகப் அங்கு சென்றுள்ளார். தன் கையில் இருந்து பணத்தைக் கொடுத்து சாவித்திரிக்கு உதவி செய்தாராம்.
ஜெமினி மட்டும் அல்ல; சாவித்ரியின் வாழ்க்கையை சீரழித்த அரசியல்வாதி யார்?
2 நாளில் பணத்தை திருப்பி கொடுக்க சொன்ன சாவித்திரி
இதனால் சாவித்திரி மிகவும் மகிழ்ச்சி அடைத்தார். விஜயாவை கட்டிப்பிடித்து, "மிக்க நன்றி அம்மா. நீங்க எனக்கு ரொம்ப பெரிய உதவி செஞ்சீங்க" நான், வீடு திரும்பியவுடன் உங்கள் பணத்தை அனுப்பிவிடுவதாகச் கூறி அட்ரஸ் வாங்கி வைத்து கொண்டாராம். பின்னர் இரண்டு நாட்களில்... டிரைவரிடம் தனக்கு உதவிய விஜயாவுக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் படி கூறி அனுப்பினாராம். இந்த தகவலை தான் கே.விஜயா தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.