4 வருஷமா கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி; காரணம் என்ன?
சத்யராஜ் மனைவி மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமா கண்டிஷனில் இருப்பதாக அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூறி இருக்கிறார்.
Sathyaraj Wife
1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ். அவருக்கு சமகால நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இன்றும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சத்யராஜ் டிரெண்டுக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்ததற்கு பின் அவருக்கு பான் இந்தியா அளவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது.
Sathyaraj Wife
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்து வருகிறார் சத்யராஜ். இருவரும் 38 வருடங்களுக்கு பின்னர் இப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதுதவிர ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வரும் சத்யராஜுக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சத்யராஜ் மகன் சிபிராஜ், தன் தந்தையைப் போலவே சினிமாவில் நடிகனாக கலக்கி வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் சிபி.
இதையும் படியுங்கள்... முடிவுக்கு வந்த 38 ஆண்டு காத்திருப்பு.. ரஜினியின் கூலி - ராஜசேகராக கலக்கப்போகும் "உயர்ந்த மனிதன்"!
Sathyaraj Daughter
அதேபோல் சத்யராஜ் மகள் திவ்யா, சினிமா பக்கம் தலைகாட்டாவிட்டாலும் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். அண்மையில் இவர் அரசியலில் குதிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. அதுவும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த திவ்யா சத்யராஜ், பாஜகவின் அழைப்பை தான் நிராகரித்துவிட்டதாக கூறினார். இருப்பினும் தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
Sathyaraj
சத்யராஜின் பேமிலியில் சிபிராஜ், திவ்யா பற்றி பலரும் அறிந்திருந்தாலும் சத்யராஜ் மனைவி மகேஸ்வரி பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில், தன் தாய் பற்றி திவ்யா உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதன்படி சத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் தான் இருக்கிறாராம். அவருக்கு PEG டியூப் மூலம் தான் உணவளித்து வருவதாக கூறியுள்ள அவர், மருத்துவ முன்னேற்றத்திற்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
Divya Sathyaraj
என் அம்மாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என நம்புகிறோம். கடந்த நான்கு வருடங்களாக என் தந்தை ஒரு சிங்கிள் பேரண்டாக இருக்கிறார். அப்பாவின் அம்மாவும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். நானும் என் அப்பாவுக்கு ஒரு சிங்கிள் மதராக இருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து பவர்புல்லான சிங்கிள் பேரண்ட் கிளப்பை உருவாக்கி உள்ளோம். Brain Haemorrhage, அதாவது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் தான் தனது தாய் மகேஸ்வரி கோமாவுக்கு சென்றதாக திவ்யா சத்யராஜ் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஒரு வருடத்தில் 21 படமா! ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்த தமிழ் ஹீரோஸ் லிஸ்ட் இதோ