MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கல்யாணம் வேண்டாம்... ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள ரெடி! சத்யராஜ் மகள் திவ்யா அதிரடி பேச்சு!

கல்யாணம் வேண்டாம்... ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள ரெடி! சத்யராஜ் மகள் திவ்யா அதிரடி பேச்சு!

Sathyaraj Daughter Divya: பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தன்னுடைய காதல் தோல்வி மற்றும் திருமணம் குறித்த தன்னுடைய கருத்தை கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 26 2026, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சத்யராஜ்:
Image Credit : our own

சத்யராஜ்:

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக மாறியவர் தான் சத்யராஜ். ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், நடிப்புக்காக சொந்த ஊரான கோயம்புத்தூரை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து, பல கஷ்டங்களையும் சவால்களையும் தாண்டி தான் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அவர் தற்போது வரை அவரது கொள்கைகளை பின்பற்றி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
சத்யராஜின் மகள் திவ்யா
Image Credit : our own

சத்யராஜின் மகள் திவ்யா

சத்யராஜின் மகன் சிபிராஜ் தந்தை போலவே சினிமாவை தேர்வு செய்தாலும், வெற்றிபெற முடியாத ஹீரோவாகவே சினிமாவில் நீடித்து வருகிறார். சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வந்ததோடு, மகிழ்மதி என்கிற இயக்கம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வந்தார். கடந்த இரண்டு வருடமாக திமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சி பணியாற்றி வருகிறார்.

37
முழு அரசியலில் திவ்யா சத்யராஜ்
Image Credit : X

முழு அரசியலில் திவ்யா சத்யராஜ்

குறிப்பாக இந்த சட்டமன்ற தேர்தலுக்காக திமுக கட்சிக்காக தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தன்னை முழு அரசியலில் அர்ப்பணித்து கொண்டதோடு மட்டும் இல்லாமல், விஜய் பற்றியும் தவெக கட்சி குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வந்ததையும் பார்க்க முடிந்தது.

47
தனிப்பட்ட வாழ்க்கை:
Image Credit : our own

தனிப்பட்ட வாழ்க்கை:

இந்த நிலையில் தான் திவ்யா சத்யராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில முக்கியமான விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக திருமணம் பற்றி அவர் கூறிய கருத்து பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

57
திருமணம் :
Image Credit : our own

திருமணம் :

திருமணம் குறித்த தன்னுடைய கருத்தை கூறும் போது, “திருமணம் என்பது எல்லோருக்கும் அவசியம் என்று நான் நினைக்கவில்லை. திருமணத்தில் நடைபெறும் வழக்கமான சடங்குகளாக தாலி கட்டுவது, மோதிரம் மாற்றுவது போன்றவற்றில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆண் - பெண் இருபாலருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால் அவர்கள் இணைந்து வாழலாம். அதற்காக கட்டாயமாக திருமணம் செய்ய வேண்டும் என தேவையில்லை. மேலும், ஒரே வீட்டில் தான் அவர்கள் வாழ வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருக்க வேண்டியதில்லை. அவரவர் வீட்டில் இருந்தபடியே அவர்கள் தங்களின் வாழ்க்கையை தொடரலாம்” என்று கூறியுள்ளார்.

67
குழந்தை:
Image Credit : our own

குழந்தை:

குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பேசும் போது, “திருமணம் செய்த பிறகே குழந்தை பெற வேண்டும் என்ற கட்டாயத்தை நான் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டேன். திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வதில் எனக்கு முழு ஒப்புதல் உள்ளது” என கூறியுள்ளார். அதே போல் “எனக்கு ஜாதகம் இல்லை என்பதையே நான் பெருமையாக பார்க்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

77
காதல் தோல்வி:
Image Credit : our own

காதல் தோல்வி:

இதைத்தொடர்ந்து தனது காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ள திவ்யா சத்யராஜ், “நானும் காதலித்திருக்கிறேன். அந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதை ஒருபோதும் என் பெற்றோர் முன்பு நான் வெளிக்காட்டியது இல்லை. தனிமையில் பல நேரம் அழுதுள்ளேன். நானே அந்த தோல்வியை சமாளித்து மீண்டும் வந்தேன்” என கூறியுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கை முடிவுகளுக்கு ஒருபோதும் என் தந்தை தடைகள் போட்டது கிடையாது. சுதந்திரமான முடிவுகளை எடுக்க அனுமதி கொடுத்துள்ளார். அவருக்கு என்னுடைய மகிழ்ச்சி தான் முக்கியம். நான் திருமணம் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அது என் தேர்வு என்று அவர் விரும்புகிறார் என வெளிப்படையாக திவ்யா பேசியுள்ளார். சிலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வந்தாலும், சிலர் இது கலாச்சாரத்திற்கு புறம்பானது என கூறி வழக்கம் போல் தங்களின் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
திமுக
அரசியல்
திவ்யா சத்யராஜ்
தளபதி விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image2
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Recommended image3
Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved