திமுகவில் இணையப் போகும் மகள்?... தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகும் சத்யராஜ்...!
First Published Dec 17, 2020, 5:13 PM IST
மகள் திவ்யா திமுகவில் இணைய உள்ளதால் சத்யராஜ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என படிப்படியாக வெற்றி கண்டவர் சத்யராஜ். இந்திய அளவில் பேசப்பட்ட பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் கூட சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது.

சத்யராஜ் மகன் சிபிராஜ் கோலிவுட்டில் நாயகனாக நடித்து வருகிறார். மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். அதுமட்டுமின்றி சமூக சிந்தனை கொண்ட திவ்யா பல்வேறு விஷயங்களாகவும் குரல் கொடுத்து வருகிறார். அப்பா சத்யராஜைப் போலவே மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?