திரும்பிய பக்கமெல்லாம் ஹவுஸ்புல்; டூரிஸ்ட் பேமிலி படத்தின் வசூல் மட்டும் இத்தனை கோடியா?
அபிஷன் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், கமலேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Tourist Family Box Office Collection : அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. குட் நைட், லவ்வர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய யுவராஜ் கணேசனின் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. இப்படத்தில் இலங்கைத் தமிழராக நடித்துள்ளார் சசிகுமார். இப்படம் மே 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
சிம்ரன், சசிகுமார்
சிம்ரன் ஜோடியாக சசிகுமார்
டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படம் ரிலீசுக்கு முன்னரே திரையுலகினர் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், ரிலீஸ் ஆன பின்னரும் இப்படத்திற்கு ஆடியன்ஸிடமும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
டூரிஸ்ட் பேமிலி படக்குழு
டூரிஸ்ட் பேமிலி வசூல்
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெறும் ரூ.7 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவதால் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.2.10 கோடி வசூலித்து இருந்தது. இதையடுத்து இரண்டாம் நாளில் இப்படம் சற்று சரிவை சந்தித்து ரூ.1.60 கோடி வசூலித்த நிலையில், மூன்றாம் நாளில் மீண்டும் வசூல் வேட்டையை தொடங்கி உள்ளது.
டூரிஸ்ட் பேமிலி போஸ்டர்
பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் டூரிஸ்ட் பேமிலி
அதன்படி டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சனிக்கிழமை மட்டும் ரூ.2.90 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் மூன்று நாட்களில் ரூ.6.60 கோடி வசூலித்து இருக்கிறது. இதன்மூலம் மூன்று நாட்களில் படத்தில் போட்ட காசு வந்துவிட்டது. இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மேலும் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகுமாரின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாகவும் டூரிஸ்ட் பேமிலி மாற வாய்ப்பு உள்ளது. இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் இதன் திரையரங்க எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.