- Home
- Cinema
- தங்க செயின் பரிசளித்து.... அயோத்தி படத்தின் அல்டிமேட் வெற்றியை கொண்டாடிய சசிகுமார் - சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் இதோ
தங்க செயின் பரிசளித்து.... அயோத்தி படத்தின் அல்டிமேட் வெற்றியை கொண்டாடிய சசிகுமார் - சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் இதோ
அயோத்தி படத்தின் சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும், இயக்குனர் மந்திரகுமாருக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார் சசிகுமார்

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி சுப்ரமணியபுரம் என்கிற தரமான படத்தை கொடுத்த சசிகுமார். அதன்பின் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். ஆரம்பத்தில் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களிலேயே அதிகளவில் நடித்து வந்த சசிகுமார், தற்போது வித விதமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த ஒரு படம் தான் அயோத்தி.
சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை மந்திர மூர்த்தி எனும் புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இது சசிகுமார் உடன் பிரீத்தி அஸ்ரானி, யாஷ்பால் ஷர்மா, குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட், அத்வைத் ஆகியோர் நடித்திருந்தனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்திருந்த இப்படம் கடந்த மார்ச் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் ரிலீஸ் ஆன இப்படத்தின் கதை வேறலெவலில் இருந்ததால் இப்படத்தை விமர்சகர்கள் கொண்டாடினர்.
இதையும் படியுங்கள்... இது சிக்கனா இல்ல காக்கா கறியா? ஆசை ஆசையாய் கே.எஃப்.சி-யில் சாப்பிட போன வனிதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அனைத்து விமர்சனங்களுமே பாசிட்டிவ் ஆக வந்ததால், இப்படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் பிக்-அப் ஆன இப்படம் தற்போது மூன்றாவது வாரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. அயோத்தி படத்தின் இந்த அதிரி புதிரியான வெற்றியால் உற்சாகம் அடைந்த சசிகுமார் படக்குழுவினருடன் சேர்ந்து இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
இந்த சக்சஸ் மீட்டில் சசிகுமார், இயக்குனர் மந்திர மூர்த்தி, தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகர் புகழ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும், இயக்குனர் மந்திரகுமாருக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார் சசிகுமார். அயோத்தி படத்தின் சக்சஸ் மீட் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Dhanush : என்னது இவங்க மறுபடியும் சேரப்போறாங்களா..! குட் நியூஸ் உடன் காத்திருக்கும் தனுஷ்