MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளே சிக்சர் அடித்த டூரிஸ்ட் பேமிலி - வசூல் எவ்வளவு தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளே சிக்சர் அடித்த டூரிஸ்ட் பேமிலி - வசூல் எவ்வளவு தெரியுமா?

அபிஷன் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 02 2025, 08:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Tourist Family Day 1 Box Office Collection : சசிகுமார் நடிப்பில் மே 1ந் தேதி ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சசிகுமார் ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இது சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டூரிஸ்ட் பேமிலி படக்குழு

டூரிஸ்ட் பேமிலி படக்குழு

வரவேற்பை பெறும் டூரிஸ்ட் பேமிலி

டூரிஸ்ட் பேமிலி படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அதன் ஸ்பெஷல் ஷோ பார்த்த திரைப்பிரபலங்கள் இப்படத்தை ஆஹா, ஓஹோ என பாராட்டி இருந்தனர். இதனால் இப்படத்திற்கு ஓவர் ஹைப்பும் உருவானது. இதற்கு முன்னர் இதுபோன்று பாராட்டப்பட்ட படங்களெல்லாம் ரசிகர்கள் மத்தியில் மொக்கை வாங்கி இருக்கின்றன. ஆனால் டூரிஸ்ட் பேமிலி படம் கொடுத்த ஹைப்புக்கு ஒர்த் ஆன படமாக அமைந்துள்ளது. ரசிகர்களும் இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

34
டூரிஸ்ட் பேமிலி போஸ்டர்

டூரிஸ்ட் பேமிலி போஸ்டர்

டூரிஸ்ட் பேமிலி வசூல் நிலவரம்

ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வசூலிலும் கெத்து காட்டி இருக்கிறது. இப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.6 கோடி வரை வசூலித்து உள்ளது. சசிகுமாரின் கெரியரிலேயே அவர் ஹீரோவாக நடித்து முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை டூரிஸ்ட் பேமிலி படைத்துள்ளது. மேலும் இப்படம் உலகளவில் ரூ.2.5 கோடி வரை வசூலித்திருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
சிம்ரன், சசிகுமார்

சிம்ரன், சசிகுமார்

டூரிஸ்ட் பேமிலி பட்ஜெட்

டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெறும் ரூ.7 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படம் வசூலிப்பதை பார்த்தால் இந்த வார இறுதியிலேயே போட்ட காசை எடுத்துவிடுவார்கள் என தோன்றுகிறது. அடுத்த 14 நாட்களுக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லாததால், டூரிஸ்ட் பேமிலி தமிழ் சினிமாவின் அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் போகப்போக இதன் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிம்ரன்
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 : ஜனநாயகன் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்க ரெடியான ஜெயிலர் 2... முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா?
Recommended image2
TTF Vasan : பிக் பாஸ் வரலாற்றில் டிடிஎஃப் வாசன் படைத்த மிகப்பெரிய சாதனை...!
Recommended image3
Villain : அன்று டெரர் வில்லன்... இன்று காமெடி பீஸ்! வில்லத்தனத்தை மூட்டை கட்டிவிட்டு காமெடிக்கு தாவிய 5 நடிகர்கள்
Related Stories
Recommended image1
டூரிஸ்ட் பேமிலி ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ
Recommended image2
Now Playing
Tourist Family Movie | இந்த படம் முழுவதும் குடும்பங்களுக்காக உருவாக்கிய படம் ..நடிகை சிம்ரன் பேச்சு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved