MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சசிகுமார் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை... அஞ்சலி செலுத்த விஜயகாந்தின் நினைவிடத்திற்கு படையெடுத்து வந்த பிரபலங்கள்

சசிகுமார் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை... அஞ்சலி செலுத்த விஜயகாந்தின் நினைவிடத்திற்கு படையெடுத்து வந்த பிரபலங்கள்

கேப்டன் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போன பிரபலங்கள் தற்போது அடுத்தடுத்து அவரது நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 05 2024, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினர் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து கலந்துகொண்டாலும், முன்னணி நடிகர்கள் சிலர் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், அஜித், தனுஷ் ஆகியோர் புத்தாண்டு கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால் அவர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வில்லை. இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் முடிவடைந்து ஒவ்வொருவராக தற்போது சென்னை திரும்பி வரும் நிலையில், அவர்கள் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அண்ணனோட இழப்பு ஈடுசெய்ய முடியாதது... கேப்டன் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா - கலங்கவைக்கும் வீடியோ

35

நேற்று நடிகர் கார்த்தி தனது தந்தை சிவக்குமார் உடன் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று காலை அவரின் சகோதரர் சூர்யா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீட்டுக்கு சென்று பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கும் ஆறுதல் கூறினார் சூர்யா. 

45

அதேபோல் நடிகர் சசிகுமாரும் இன்று காலை விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கேப்டனின் இல்லத்துக்கு சென்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், ஷண்முகப்பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்தார்.

55

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கையோடு, சாலிகிராமத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். தான் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் இருந்ததால் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவில்லை எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்தார்.

இதையும் படியுங்கள்... Baakiyalakshmi: 'பாக்கியலட்சுமி' தொடரில் இருந்து சன் டிவிக்கு ஜம்ப்பான பிரபல நடிகை! இவங்க தான் ஹீரோயினா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அருண் விஜய்
கார்த்தி (நடிகர்)
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஜித் குடும்பத்தை உலுக்கிய துயரம்... தந்தையைத் தொடர்ந்து தாயையும் இழந்த நடிகர் அஜித் குமார்...
Recommended image2
Music: காதலர்களை மயக்கிய ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.! ரசிர்களை கட்டிப்போட்ட மெல்லிசை பிறந்த கதை.!
Recommended image3
Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved