ரொமான்ஸ் செய்வதில் ஹீரோ - ஹீரோயின்களை மிஞ்சிய சார்பட்டா வில்லன் வேம்புலி! மனைவியுடன் வித்தியாசமான போட்டோ ஷூட்!
'சார்பட்டா' படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ள, மலையாள நடிகர் ஜான் கோகென்... தன்னுடைய காதல் மனைவி பூஜாவுடன் வித்தியாசமாக எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவான நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா - ராமச்சந்திரன் மற்றும் ஜான் கோகென் தம்பதி தற்போது ஒர்க் அவுட் செய்தபடி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வித்தியாசமான புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
சார்பட்டா படத்தின் மூலமாகவே ஜான் கோகென் அறியப்பட்டாலும், அவரது மனைவி பூஜா தமிழ் சின்னத்தை மற்றும் வெள்ளித்திரை வட்டாரத்தில் மிகவும் பரிச்சியமானவர்.
நடிகை பூஜா ராமச்சந்திரன், ஒரு வீடியோ ஜாக்கியாக சின்னத்திரையில் தன்னுடைய பணியை துவங்கி, பின்னர் மாடல், நடிகை, என அனைவராலும் நன்கு அறியப்பட்டவர்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக நடிக்கமுடியவில்லை என்றாலும், 'பீட்சா', 'களம்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'காஞ்சனா 2 ' போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழை தவிர தெலுங்கிலும், முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இயக்குனர் அட்லி தயாரிப்பில் வெளியான, 'அந்தகாரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூஜா நடித்திருந்தார்.
ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே. கேரிக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து 2017 -ல் விவாகரத்து பெற்றார்.
இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின், இருவருமே தங்களுடைய ஒர்க் அவுட் மற்றும் சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வருகிறார்கள்.
மலையாள நடிகரான ஜான் கோகென் தமிழில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த நிலையில், முதல் படமான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் தன்னுடை மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய மனைவி பூஜா ராமச்சந்திரனுடன் இணைந்து மிகவும் வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி வியக்கவைத்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.