சர்தார் பட இயக்குனருக்கு விரைவில் டும் டும் டும்... வைரலாகும் நிச்சயதார்த்த போட்டோஸ் - பொண்ணு யார் தெரியுமா?
PS Mithran Engagement : இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
விஷால் - சமந்தா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இரும்புத்திரை படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். ஆன்லைன் மூலம் நடக்கும் நூதன கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் இணைந்தார்.
இவர்கள் கூட்டணியில் ஹீரோ திரைப்படம் உருவானது. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படத்தில் கல்வியில் நடக்கும் ஊழல்கள் பற்றி பேசி இருந்தார் பி.எஸ்.மித்ரன். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து தற்போது நடிகர் கார்த்தி உடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் சர்தார் திரைப்படம் தயாராகி வருகிறது.
சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர் பிரபல சினிமா பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐப்பன் என்பவரை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களது நிச்சயதார்த்ததில் கலந்துகொண்ட அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் அங்கு மணமக்களுடன் செல்ஃபி எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Vikram : நான் ஒன்னும் அவ்ளோ பெரிய உத்தமி இல்ல... ஓப்பனாக பேசி ரசிகர்களை பக்குனு ஆக்கிய 'விக்ரம்' பட நடிகை