MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அன்று ஒரு டெயிலர்; இன்று ஒரு படத்திற்கு 70 கோடி சம்பளம்; ரஜினி, ஐஸ்வர்யா ராயை விட பணக்காரர்!

அன்று ஒரு டெயிலர்; இன்று ஒரு படத்திற்கு 70 கோடி சம்பளம்; ரஜினி, ஐஸ்வர்யா ராயை விட பணக்காரர்!

சினிமா உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ஒரு காலத்தில் வறுமையில் வாழ்ந்தவர் என்பது பலரும் அறியாத உண்மை. 

2 Min read
Author : Ramya s
Published : Aug 24 2024, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Sanjay leela bansali

Sanjay leela bansali

இன்று ஆடம்பரமான பங்களாக்களில் வசிக்கும் பல திரையுலக நட்சத்திரங்கள், ஒரு காலத்தில் தூங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்துள்ளனர். அல்லது குடும்பத்துடன் ஒரே அறையில் வாழ்ந்தனர். அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம், இப்போது தனது நடிகர்களை விட 30 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார். இந்த நட்சத்திரம் சில கிளாசிக் கிளாசிக் படங்கள் மற்றும் பிளாக்பஸ்டர்களை வழங்கி உள்ளார். இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே பல நடிகர், நடிகைகளின் கனவாக உள்ளது. அவர் வேறு யாருமல்ல இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குனராக இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Sanjay Leela Bhansali

Sanjay Leela Bhansali

சஞ்சய் லீலா பன்சாலி ஒரு சேரியில் பிறந்தார். 10க்கு 10 அறையில் தனது குடும்பத்துடன் வசித்துள்ளார். பாலிவுட்டில் தயாரிப்பாளராகத் தோல்வியடைந்ததால், தனது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். பின்னர் அவரது தாயாரே முழுப் பொறுப்பையும் ஏற்று டெயிலராக பணிபுரிந்து தனது குடும்பத்தை காப்பாற்றி உள்ளார். எனவே தனது தாயாருக்கு உதவுவதற்காக, அவரும் சில நேரம் தையல் வேலைகளை செய்துள்ளார்.

39
Sanjay Leela Bhansali

Sanjay Leela Bhansali

சஞ்சய் லீலா பன்சாலி ஒருமுறை அளித்த பேட்டியில், “நாங்கள் மிகவும் ஏழ்மையான வீட்டில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டு  சுவர்களில் பெயிண்ட் இருக்காது.. அம்மா ஒரு அற்புதமான நடனக் கலைஞர், எனவே அவர் அந்த சிறிய (இடத்தில்) நடனமாடுவார். எங்களிடம் உடுத்துவதற்கு நல்ல ஆடைகள் இல்லை. அதனால், சிறுவயதில் நான் இழந்த பல விஷயங்கள் இருந்தன. என் மனம் எப்போதும் ஒரு திரைப்பட இயக்குனரின் மனமாகவே இருந்தது.

49
Sanjay Leela Bhansali

Sanjay Leela Bhansali

சிறுவயதில் உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்யும் போது, ​​சுவர் என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்று யோசிப்பேன். அந்த அழகின்மையிலோ, அல்லது இடப்பற்றாக்குறையிலோ அழகு தேடுவதில் என் மனம் மும்முரமாக இருந்தது. அதன் காரணமாக எனது படங்களின் செட்டுகள் மிகப்பெரியதாக பிரம்மாண்டமாக இருந்தது.” என்று கூறியிருந்தார்.

59
Sanjay leela bansali

Sanjay leela bansali

பாலிவுட்டில் உதவி இயக்குநராக பணிபுரியத் தொடங்கிய சஞ்சய் லீலா பன்சாமி, காமோஷி: தி மியூசிகல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். எனினும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. பின்னர் ஹம் தில் தே சுகே சனம் மற்றும் தேவதாஸ் ஆகிய காதல் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார் சஞ்சய் லீலா பன்சாலி.

69
Sanjay leela bansali Movies

Sanjay leela bansali Movies

பிளாக், குஸாரிஷ், ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி, கங்குபாய் கத்தியவாடி என பல பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி உள்ளார். தற்போது நாட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறி உள்ள அவர் சமீபத்தில் ஹீராமண்டி என்ற வெப் சீரிஸை இயக்கி இருந்தார்.

79
Heeramandi

Heeramandi

ஹீராமண்டி சீரிஸில் நடித்த நடிகர்களை விட சஞ்சய் லீலா பன்சாலி 30 மடங்கு வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வெப்சீரிஸுக்காக அவர்  60-70 கோடி ரூபாய் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இது அவரை பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக மாற்றி உள்ளது.

 

89
Sanjay leela bansali

Sanjay leela bansali

நாட்டின் பணக்கார இயக்குனர்களில் ஒருவராகவும் சஞ்சய் லீலா பன்சாலி இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.  940 கோடி என்று கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் (ரூ. 450 கோடி), பிரபாஸ் (ரூ. 250 கோடி), மற்றும் ஐஸ்வர்யா ராய் (ரூ. 862 கோடி) போன்ற சில பெரிய நட்சத்திரங்களை விட பணக்காரராக இருக்கிறார்.

99
Sanjay leela bansali movie

Sanjay leela bansali movie

தற்போது, சஞ்சய் லீலா பன்சாலி லவ் & வார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை 2025-ல் வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved