வசூல் வேட்டை நடத்தும் பாலிவுட் ரீ-ரிலீஸ் படம்! மவுசு குறையாத காதல் கதை!!
Sanam Teri Kasam Re-Release Box Office Collection: "சனம் தேரி கசம்" திரைப்படம் ரீ-ரிலீஸில் யாரும் எதிர்பாராத அளவுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2016-ல் வெளியானபோது வரவேற்பு பெறாத இப்படம், தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

Sanam Teri Kasam Re-Release Box Office Collection
ரீ-ரிலீஸில் செய்யப்பட்ட "சனம் தேரி கசம்" என்ற பாலிவுட் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைத்துள்ளது. இந்தப் படம் இதுவரை ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
Sanam Teri Kasam Re-Release Box Office Collection
சனம் தேரி கசம் முதலில் 2016ஆம் ஆண்டு வெளியானது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. வெறும் ரூ.7 கோடி மட்டுமே வசூல் செய்ததால் படத் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் மிஞ்சியது.
Sanam Teri Kasam Re-Release Box Office Collection
அதே படம் 9 வருடங்களுக்குப் பிறகு பிப்ரவரி 7ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இப்போது ரசிகர்களிம் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.
Sanam Teri Kasam Re-Release Box Office Collection
மறுவெளியீடு செய்த முதல் நாளே 5.14 கோடி வசூல் செய்தது படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இரண்டாம் நாள் வசூல் 9.5 கோடியாக எகிறியது. 2016ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தபோது கிடைத்த வசூலை ஒரே நாளில் எட்டிவிட்டது.
Sanam Teri Kasam Re-Release Box Office Collection
தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூல் சீராக அதிகரித்து முதல் வாரத்தில் 30.67 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. சமீபத்திய தகவலின்படி, இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.50 கோடியைத் தாண்டிவிட்டதாகத் தெரிகிறது.
Sanam Teri Kasam Re-Release Box Office Collection
அப்படி இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷலாக இருக்கிறது? ஹீரோ ஹர்ஷ்வர்தன் ரானே, ஹீரோயின் மவ்ரா ஹோகேனே இருவரும் புதுமுகங்கள்தான். இருந்தாலும் ரீ-ரிலீஸ் செய்யும்போது வசூல் வேட்டை நடத்திக்கொண்டு இருப்பது சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Sanam Teri Kasam Re-Release Box Office Collection
சனம் தேரி கசம் ரீ-ரிலீஸ் செய்யும்போது சவால் காத்திருந்தது. கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘லவ் பாயா’ போன்ற படங்கள் இதனுடன் சேர்ந்து வெளிவந்தபோதும், போட்டியைத் தாக்குப்பிடித்து பல கோடிகளை வசூலித்து அசத்தியுள்ளது.
Sanam Teri Kasam Re-Release Box Office Collection
ஒன்பது வருடம் கழித்து மீண்டும் வெளியாகும் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைப்பதற்கு முக்கியக் காரணம் புதிய காதல் கதைகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டதுதான் என சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். இருந்தாலும் நல்ல படங்கள் எத்தனை காலம் கழித்து ரிலீஸ் செய்தாலும் நன்றாக ஓடும் என சினிமா ரசிகர்கள் சொல்கின்றனர்.