காதல் டூ கல்யாணம்... வைரலாகும் சமந்தா - ராஜ் நிடிமோரு ஜோடியின் 2வது திருமண போட்டோஸ்
நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

Samantha Weds Raj Nidimoru
நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, 'ஃபேமிலி மேன்' தொடரின் போது இயக்குநர் ராஜுடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களது திருமணம் இன்று நடைபெற்று உள்ளது.
ராஜ் நிடிமோருவை கரம்பிடித்தார் சமந்தா
சமந்தாவுக்கும், ராஜ் நிடிமோருவுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்கள் இருவரும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இன்று காலை முதலே சமந்தாவின் திருமண செய்தி தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து இருந்தது.
சமந்தா கல்யாணம் முடிந்தது
இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி திருமண புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார். அதில் இருவரும் ஈஷா யோகா மையத்தில் மாலையும் கழுத்துமாக காட்சியளிக்கின்றனர்.
சமந்தா கல்யாண போட்டோ வைரல்
சமந்தா சிகப்பு நிற சேலை அணிந்திருக்கிறார். ராஜ் நிடிமோரு ஒரு வெள்ளை நிற குர்த்தாவும் மேலே பிஸ்கட் நிற கோர்ட்டும் அணிந்திருக்கிறார். இருவரும் ஈஷா யோகா மையத்தில் உள்ள துர்கா கோவிலில் வைத்து மோதரம் மாற்றி திருமணம் செய்திருக்கிறார்.
யார் இந்த ராஜ் நிடிமோரு?
ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்த ராஜ் நிடிமோரு, இன்ஜினியரிங் முடித்து அமெரிக்கா சென்றார். அங்கு டிகே உடன் இணைந்து குறும்படங்கள், ஆங்கிலப் படங்கள் இயக்கி, பின்னர் பாலிவுட்டில் செட்டில் ஆனார். ராஜ் மற்றும் டிகே இயக்குநர்கள் ஜோடி பிரபலமானது. 'ஃபேமிலி மேன்' தொடர் இவர்களுக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. 'கோ கோவா கான்' மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்று, பல ஹிட் வெப் சீரிஸ்களை வழங்கியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

