மெர்சல் பட பிரச்சனை..ஜவானை மறுத்த சமந்தா..அட்லீயின் முதல் சாய்ஸ் இவங்க தானாம்?
நயன்தாராவுக்கு முன், கதாநாயகிக்கான முதல் தேர்வு சமந்தாவுக்கு வழங்கப்பட்டதாக புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

jawan
விஜயின் அடுத்த ஹிட்களை கொடுத்த அட்லி தனது முதல் இந்தி திரைப்படத்திற்காக ஷாருக்கானுடன் இணைந்துள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யன்தாரா விசாரணை அதிகாரியாகவும், ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
shah rukh khan -atlee
நேற்று வெளியான டைட்டில் டீசரில் ஷாருக் கான் முரட்டுத்தனமான தோற்றத்தில் நடித்துள்ளார்இதில் ஷாருக்கான முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றியபடி காட்சியளித்தார். இது கடந்த 1990-ம் ஆண்டு வெளியான டார்க் மேன் எனும் ஹாலிவுட் படத்தின் தோற்றத்தை ஒத்து இருப்பதாக கூறி நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த படமும் காப்பி என சொல்லப்படுவது அட்லீ ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
nayanthara - samantha
இந்நிலையில் நயன்தாராவுக்கு முன், கதாநாயகிக்கான முதல் தேர்வு சமந்தாவுக்கு வழங்கப்பட்டதாக புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமந்தாவுக்கு முதலில் 'ஜவான்' வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அதை நிராகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன . சமந்தா இந்த திட்டத்தை நிராகரித்தவுடன், அது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.
atlee - samantha
முன்னதாக அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தார் சமந்தா. இந்த படமும் இதன் ஜோடியும் ரசிகர்களை வெகுவாக இத்திருந்தது. இதில் மெர்சல் படப்பிடிப்பிடிப்பின் போது அட்லீ சமந்தா இடையே ஏற்பட்ட பிரசனையின் காரணமாகவே அவர் இதில் ஜவானில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் சொல்கிறது.