தமிழ்நாட்டில் நடக்கும் சமந்தா-வின் 2வது திருமணம்..? எங்கு... எப்போது தெரியுமா?
பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தா, தன்னுடைய இரண்டாவது திருமணத்தை தமிழ்நாட்டில் தான் செய்துகொள்ள உள்ளாராம். அதன் பின்னணியை விரிவாக பார்க்கலாம்.

Samantha second marriage
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை சமந்தா ரூத் பிரபு, தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக செய்திகளில் இடம்பிடித்துள்ளார். டிசம்பர் 1 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சமந்தா இரண்டாவது திருமணம் செய்யப் போவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து சமந்தா அல்லது அவரது தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், சமந்தாவின் வருங்கால கணவர் யார் என்று பார்ப்போம்?
சமந்தாவின் வருங்கால கணவர் யார்?
சமந்தா திரைப்பட இயக்குனர் ராஜ் நிதிமோருவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். ராஜ் ஆந்திராவின் திருப்பதியைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டம் பெற்ற பிறகு அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். பின்னர், தனது கிரியேட்டிவ் பார்ட்னர் மற்றும் நண்பரான கிருஷ்ணா டி.கே. உடன் இணைந்து ராஜ் டி2ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதன் பிறகு இந்த ஜோடி வெற்றி பெற்றது. இவர்களின் பிரபலமான வெப் தொடரான 'தி ஃபேமிலி மேன்' மக்களின் மனதைக் கவர்ந்தது.
சமந்தாவின் காதல் கதை
தி ஃபேமிலி மேன் வெப் தொடரின் இரண்டாவது சீசனில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். அதில் பணியாற்றியபோது தான் சமந்தாவுக்கும், ராஜுக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இருப்பினும் இந்தக் காதலை இருவரும் பொதுவெளியில் அறிவிக்காமல் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார். ராஜ் நிதிமோருவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.
ராஜ் நிதிமோருவின் முன்னாள் மனைவி பதிவு வைரல்
சமந்தா மற்றும் ராஜ் திருமணம் குறித்த வதந்திகள் அதிகரித்து வரும் நிலையில், நிதிமோருவின் முன்னாள் மனைவி ஷ்யாமலி டேயின் சமூக வலைதளப் பதிவு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'விரக்தியடைந்தவர்கள் விரக்தியான செயல்களைச் செய்வார்கள்' என்று மைக்கேல் புரூக்ஸின் கருத்தை மேற்கோள் காட்டி ஷ்யாமலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். 'கடந்த கால கடன்கள்' பற்றி அவர் மற்றொரு மர்மமான பதிவைப் பகிர்ந்த சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பதிவு வந்துள்ளது. சமந்தாவின் முதல் திருமணம் 2017ல் நாக சைதன்யாவுடன் நடந்தது. இருப்பினும், 2021ல் இந்த ஜோடி விவாகரத்து அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

