இவருடன் சமந்தா காட்டிய நெருக்கம் தான் விவாகரத்துக்கு காரணமா? யார் அவர்? வைரலாகும் புகைப்படம்..!
தென்னிந்திய இளம் நட்சத்திர ஜோடிகளான, சமந்தா (Samantha Ruth Prabhu) மற்றும் நாகசைதன்யா (Naga chaitanya) விவாகரத்து (Divorce) குறித்த தகவல் ஏற்கனவே கசிந்த நிலையில், அதனை அவர்கள் இருவருமே அக்டோபர் 2 ஆம் தேதி உறுதி செய்தனர். தற்போது இவர்களின் விவாகரத்து பின்னணி குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சமந்தா - நாக சைதன்யா இருவரும், ஒரே நேரத்தில் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவன் - மனைவி வாழ்க்கையில் இருந்து பிரிவதை அறிவித்தனர். ஆழ்ந்து யோசித்த பிறகே இருவரும் கணவன் மனைவியாக பிரிந்து செல்ல முடிவு செய்தோம். ஒரு தசாப்த கால நட்பு எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இந்த நட்பு எங்கள் உறவின் ஆதாரம் என்று தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்த கடினமான நேரத்தில் எங்கள் ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். நாங்கள் முன்னேறத் தேவையான தனியுரிமையை எங்களுக்குத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டிருந்தனர்.
இவர்கள் பிரிவிற்கு காரணம் என கூறி, பல தகவல்கள் வெளியாகி வந்தாலும் இருவரும் தற்போது வரை தங்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என்பதை தெரிவிக்கவில்லை.
சமந்தா தொடர்ந்து துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து சர்ச்சைகளில் சிக்குவது நாக சைதன்யாவின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை, என்று ஒருதரப்பினர் தெரிவிக்க மற்றொரு புறம் சமந்தா வடிவமைப்பாளர் ஒருவருடன் நெருங்கி பழகி வருவது தான் இவர்களின் பிரிவிற்கு காரணம் என ஒரு தகவல் பரவி வருகிறது.
சமந்தா அல்லது நாக சைதன்யா இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் என்ன நடந்தது என்று பேசவில்லை. குழந்தை பெறுவதிலும் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் சமந்தா மும்பைக்கு செல்ல உள்ளதாக வெளியான வதந்திக்கு அவரே முற்று புள்ளியும் வைத்தார்... இப்படி இவர்கள் விவாகரத்து குறித்து, தொடர்ந்து வதந்தி வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது டிசைனர் ஒருவருடன் சமந்தா காட்டிய நெருக்கம் தான் விவாகரத்து காரணம் என ஒரு தகவல் பரவி வருகிறது.
இப்படி தொடர்ந்து விதவிதமான வதந்திகள் எழுந்து வரும் நிலையில், தங்களின் விவாகரத்திற்கு இது தான் காரணம் என, சமந்தா அல்லது நாம் சைதன்யா வாய் திறப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.