- Home
- Cinema
- Samantha item song in 'Pushpa': படு கிளாமரில்.. லோ நெக் ஜாக்கெட் அணிந்து ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தா!
Samantha item song in 'Pushpa': படு கிளாமரில்.. லோ நெக் ஜாக்கெட் அணிந்து ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தா!
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக இருக்கும் 'புஷ்பா' (Pushpa) படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள நிலையில், இந்த பாடலில் சமந்தாவின் லுக்கை போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். செம்ம ஹாட்டாக இருக்கும் இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

விவாகரத்துக்கு பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கட்பற்றுவதில் தீவிரம் காட்டி வரும், சமந்தா சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வரவிருக்கும் படமான புஷ்பா: தி ரைஸ் படத்திற்காக ஒரு ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.
இந்த பாடலில் இதுவரை பார்த்திடாத புதிய அவதாரத்தில் சமந்தாவை பார்க்கலாம் என கூறப்பட்டது. மேலும் இந்த ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட சமந்தாவுக்கு சுமார் 1.5 கோடி சம்பவம் வழங்கப்பட்ட தகவலும் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா முதல் முறையாக ஐட்டம் பாடலுக்கு, ஆட்டம் போட்டுள்ள நிலையில் டிசம்பர் 10 ஆம் தேதி இப்பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதில் சமந்தா கவர்ச்சிக்கு குறைவில்லாத லோ நெக் ஜாக்கெட்டில்... பார்த்தாலே கிக் ஏறும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். சமந்தா நின்று கொண்டிருக்கும் இடம் அடர்த்தியான புகையால் மூடப்பட்டுள்ளது. தற்போது சமந்தாவின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களை ஷாக்காக்கி இருந்தாலும், ரசிக்க வைத்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதெலுங்கு ஆக்ஷன் க்ரைம் திரில்லரான புஷ்பா: தி ரைஸ் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, மிரோஸ்லாவ் குபா ப்ரோஜெக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் தெலுங்குத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
டிசம்பர் 17, 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'புஷ்பா' திரைப்படம், தெலுங்கு மட்டும் இன்றி மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.