நான் உன் அப்பன் டா.... மீண்டும் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த எஸ்.ஏ.சி.... புதிய கட்சிக்கு பெயர் என்ன தெரியுமா?
First Published Jan 4, 2021, 10:50 AM IST
எஸ்.ஏ.சியின் அரசியல் முயற்சியை விஜய் முறியடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வேலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.

நடிகர் விஜய்க்கே தெரியாமல் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஆரம்பிக்க முயன்றது கோலிவுட்டிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக முந்திக்கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நான் தான் கட்சியை பதிவு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறேன். அதற்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?