அழகு தேவதை ருக்மினி வசந்த் யார் தெரியுமா: இராணுவத்துக்காக உயிரை விட்ட போர் வீரரின் மகள்!
Rukmini Vasanth Family Details : மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து முதல் ஹிட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் ருக்மினி வசந்த் யார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர் நடிகை ருக்மினி வசந்த். இவருடைய தந்தை கர்னல் வசந்த் வேணுகோபால், இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால இராணுவ விருதான அசோக சக்ராவைப் பெற்ற முதல் கர்நாடகா வீரர் ஆவார். கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உரி பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குள் ஆயுதமேந்திய ஊடுவருவல்காரர்கள் அத்துமீறி ஊடுருவுவதை தடுக்கும் போது ஏற்பட்ட போரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவருடைய தாயார் சுபாஷினி ஒரு பரதநாட்டிய கலைஞர். இவர், போரில் இறந்த இராணுவ வீரர்களின் மனைவிகளை ஆதரிக்கும் வகையில் கர்நாடகாவில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். அப்பட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ருக்மினி வசந்த்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள், வளர்ந்து வரும் நடிகைகள் என்று எத்தனையோ பிரபலங்கள் இருக்கும் நிலையில் அறிமுக நடிகைகளின் எண்ட்ரியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ஏஸ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ருக்மினி வசந்த். கடந்த மே மாதம் திரைக்கு வந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் தான் இந்த படத்திற்கு பிறகு இப்போது சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும் ருக்மினி வசந்த் நடித்துள்ளார். இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் 5ஆம் தேதி ஓணம் பண்டிகை மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது,
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் சம்பளம் உயர்ந்ததோட்டு மட்டுமின்றி அவரது சினிமா மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது. ஆம், அமரன் படத்திற்கு பிறகு மாஸ் இயக்குநர்களின் இயக்கத்தில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார்.
அமரன் கொடுத்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் மதராஸி. இந்தப் படம் எப்படி அவருக்கு முக்கியமோ அதே போன்று தான் நடிகை ருக்மினி வசந்திற்கும் இந்தப் படம் ரொம்பவே முக்கியம். தமிழில் இது அவருக்கு 2ஆவது படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர இங்கிலீஸ் படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மதராஸீ படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சேப்டர் 2 படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இது தவிர தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வரும் டிராகன் படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.