RRR: இந்திய சினிமாவின் மணிமகுடம்! 3 ஆண்டுகளை நிறைவு செய்த ஆர்ஆர்ஆர் திரைப்படம்!
சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

RRR's 3-Year Milestone: Awards, Music, and Pan India Success Story: 2022 ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் நடித்த இந்த படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். சுமார் ரூ.500 கோடியில் உருவான ஆர்ஆர்ஆர் உலகளவில் ரூ.1,400 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது.
RRR Movie
உலகளவில் நான்காவது அதிக வசூல் செய்த இந்திய படமாகவும் , மூன்றாவது அதிக வசூல் செய்த தெலுங்கு படமாகவும் 2022 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய படமாகவும் ஆர்ஆர்ஆர் அமைந்தது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடும் இரு இந்திய புரட்சியாளர்கள் பற்றிய கற்பனை கதையை கருவாக கொண்டிருந்தது.
இந்த திரைப்படம் இயக்கம் , திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, அதிரடி காட்சிகள் மற்றும் VFX ஆகியவற்றிற்காக மிகப்பெரும் பாராட்டு பெற்றது. பான் இந்தியா படமாக உருவான ஆர்ஆர்ஆர் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என அழைத்து மொழிகளிலும் பெரும் ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது.
Anna Serial: ரிலீஸ் ஆன வெங்கடேஷ்; ரத்னா விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த சண்முகம்?
RRR Movie records
அதாவது 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றது. இது ஒரு இந்திய திரைப்படத்தின் முதல் பாடலாகவும், இந்த பிரிவில் வென்ற ஒரு ஆசிய திரைப்படத்தின் முதல் பாடலாகவும் அமைந்தது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாதனைகளை வாரி குவித்த ஆர்ஆர்ஆர் அமெரிக்க நெட்பிளிக்ஸ்சின் டாப் 10 படங்களின் பட்டியலில் இடம்பெற்றது மட்டுமின்றி ஜப்பானில் அதிக வசூலிட்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. இது மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் ஆர்ஆர்ஆர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
Rajamouli, RRR Movie
திரையரங்களில் மட்டுமின்றி ஓடிடி தளத்திலும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று விளங்கியது. நெட்பிளிக்கிஸ் ஓடிடி தளத்தில் ஆர்ஆர்ஆர் படம் அதிக பார்வைகளை பெற்றது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியான நிலையில், இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் இன்று வரை ஆர்ஆர்ஆருக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. டெலிவிஷனில் இப்போது இந்த படத்தை போட்டாலும் அதிக பார்வையாளர்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
SRH ரன் மழைக்கு முன்பு தமனின் இசை மழையில் நனைய தயாரா? குலுங்கப்போகும் ஹைதராபாத்!