குடிக்காம இருக்க முடியல... தற்கொலைக்கு முயன்றேன்; என்னை மீட்டது அவர்தான்- ரோபோ சங்கர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்
குடிப்பழக்கத்தால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, 5 மாதம் படுத்த படுக்கையாக இருந்ததாக நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
robo shankar
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டதற்கு தனக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோய் தான் காரணம் என கூறி இருந்தார். இந்த நிலையில், மருத்துவக்கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரோபோ சங்கர், தான் 5 மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தேன் என்பதை கூறி இருக்கிறார்.
robo shankar
அதில் அவர் பேசியதாவது : “கடந்த ஒரு 4 மாசமா யூடியூப்ல நான் தான் சூப்பர்ஸ்டாரா இருந்தேன். தெரியாத்தனமா கிளிய வளர்த்துட்டேன். கிளி வளர்த்தா அது நம்ம பேரை சொல்லும், நம்மளோடு விளையாடும்னு நினைச்சு வளர்த்தேன். அதுனால நான் பெரும்பாடு பட்டேன். பின்னர் சினிமாவுக்கு உடல் எடையை குறைத்தேன். அப்போது தான் எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துருச்சு.
robo shankar
அதனால் ஒரு 5 மாசம் படுத்த படுக்கையா இருந்து, சாவின் விளிம்புக்கு போயிட்டேன். அதற்கு காரணம் என்னிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள் தான். அதற்கு நான் அடிமையாகிவிட்டேன். கடந்த ஜனவரி மாத வாக்கில் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டேன்.
இதையும் படியுங்கள்... சிவா மனசுல சக்தி பட நாயகியா இது? எக்கச்சக்கமா வெயிட் போட்டு... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அனுயா
robo shankar
அந்த நேரத்துல நக்கீரன் கோபால் தான் என்னை சரியான ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மஞ்சள் காமாலை நோயின் உடலில் எந்த அளவுக்கு பரவி இருக்கிறது. அதனால் என்னுடைய உடலில் எந்தெந்த பாகங்கள் எல்லாம் பாதித்துள்ளன என்பதை தெரிந்துகொண்டேன். மருத்துவர்களுடைய சரியான அட்வைஸை பாலோ பண்ணியதாலும், என் குடும்பத்தினர் பார்த்துக்கொண்டதாலும் தான் இன்று அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
robo shankar
இத்தனை வருடம் திரைத்துறையில் இருந்ததன் மூலம் எனக்கு கிடைத்த நண்பர்கள் அனைவரின் பிரார்த்தனையாலும், அவர்கள் நீ நிச்சயம் திரும்ப கம்பேக் கொடுப்ப என ஊக்கப்படுத்தியதாலும் தான் நான் இன்று மீண்டு வந்திருக்கிறேன். இப்போ எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல, ஹாப்பியா நல்ல சந்தோஷமா இருக்கேன்” என புத்துணர்ச்சியோடு ஹாப்பியாக தன் உரையை அவர் முடித்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்... பீர் பாட்டிலால் கையை அறுத்து கொண்டு... பிரபாஸின் 'ஆதிபுருஷ்' போஸ்டருக்கு அபிஷேகம் செய்த ரசிகர்! வீடியோ