- Home
- Cinema
- அன்று சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர்... இறக்கும்போது கோடீஸ்வரனாக உயிரைவிட்ட ரோபோ சங்கரின் Net Worth
அன்று சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர்... இறக்கும்போது கோடீஸ்வரனாக உயிரைவிட்ட ரோபோ சங்கரின் Net Worth
Robo Shankar Passes Away : ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Robo Shankar Net Worth
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் படப்பிடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்ததை அடுத்து, அவரை சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் இன்று ஐசியூவிற்கு மாற்றப்பட்டு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. ரோபோ சங்கரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சங்கர்... ரோபோ சங்கர் ஆனது எப்படி?
சினிமா மற்றும் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர், திருவிழாக்களில் ரோபோ டான்ஸ் ஆடுவதில் கில்லாடியாக இருந்து வந்திருக்கிறார் சங்கர். உடல் முழுக்க சில்வர் நிற பெயிண்டை அடித்துக் கொண்டு இவர் ஆடும் ரோபோ டான்ஸ் படு பேமஸ் ஆனதால், அவருக்கு ரோபோ சங்கர் என பெயர் வந்தது. பின்னர் அதுவே அவரது அடையாளமாக மாறியது. அன்று முதல் இன்று வரை ரோபோ என்கிற அடைமொழியோடு பயணித்துள்ளார் ரோபோ சங்கர்.
சின்னத்திரை டூ சினிமா
சின்னத்திரையில் அசத்தப் போவது யாரு, கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதில் மிமிக்ரியில் கலக்கிய ரோபோ சங்கர், விதவிதமான கெட்டப்புகளில் வந்து அசத்தலாக நடிக்கவும் செய்தார். இதைப்பார்த்து இம்பிரஸ் ஆன தனுஷ், அவருக்கு தன்னுடைய மாரி படத்தில் காமெடியனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அப்படம் தான் ரோபோ சங்கருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் சொட்ட சொட்ட நனையுது. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்தது ஒரே படம் தான். அந்த படத்தின் பெயர் அம்பி.
டப்பிங்கிலும் கலக்கிய ரோபோ
ரோபோ சங்கர் நடிகனாக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக 2019-ம் ஆண்டு வெளியான தி லயன் கிங் திரைப்படம் மற்றும் 2024-ல் ரிலீஸ் ஆன முஃபாசா ஆகிய படங்களில் பும்பா என்கிற கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தது ரோபோ சங்கர் தான். அவரின் குரலால் அந்த கதாபாத்திரம் மெருகேறி ரசிகர்களை கவர்ந்திருந்தது.
ரோபோ சங்கர் சொத்து மதிப்பு
சின்னத்திரைக்கு வரும் முன் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட ரோபோ சங்கர், தன்னுடைய விடாமுயற்சியால் சினிமா மற்றும் சின்னத்திரையில் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டிருக்கிறார். இவருக்கு சொந்தமாக சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. இவரின் சொத்து மதிப்பு 5 முதல் 6 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சொந்தமாக காரும் வைத்திருக்கிறார். ரியல் எஸ்டேட்டிலும் ரோபோ சங்கர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரோபோ சங்கரைப் போல் அவரது மனைவி பிரியங்கா மகள் இந்திரஜா ஆகியோரும் சினிமாவில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.