‘தளபதி’க்கு தலைவலியாக இருந்த ‘புரட்சி தலைவி’... விஜய் vs ஜெயலலிதா மோதல் வெடித்தது ஏன்? ஒரு குட்டி பிளாஷ்பேக்
நடிகர் விஜய் சந்தித்த அரசியல் நெருக்கடிகளில், ஜெயலலிதா உடனான மோதல் முக்கியமானது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் அடுத்த அரசியல் சென்சேஷனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் இவ்வளவு நாள் அரசியல் பக்கம் செல்லாமல் இருந்தாலும், பல்வேறு அரசியல் நெருக்கடிகளை சந்தித்து இருக்கிறார். அதில் முக்கியமானது தான் விஜய்க்கும், ஜெயலலிதாவுக்கும் இடையேயான மோதல். அது எங்கு ஆரம்பித்தது, எதனால் வெடித்தது அதன் பின்னணி என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
விஜய்க்கு ஒரு விதத்தில் அரசியல் ஆசையை தூண்டிவிட்டது ஜெயலலிதா என்றே சொல்லலாம். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தனது தந்தை எஸ்.ஏ.சி உடன் சென்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்த விஜய், அதிமுக-விற்கு தங்களது ஆதவரை தெரிவித்தனர். இதற்கு காரணம் காவலன் ரிலீஸ் சமயத்தில் திமுக-வினர் கொடுத்த நெருக்கடி தான். அந்த சமயத்தில் திமுக மீது அதிருப்தியில் இருந்த விஜய் அதிமுக-விற்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.
இதையடுத்து 50 தொகுதிகளில் களப்பணி செய்ய விஜய் ரசிகர்கள் தேவை என அதிமுக தரப்பில் இருந்து விஜய்க்கு ஒரு லிஸ்ட் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த 50 தொகுதிகளிலும் திமுக-வை தோற்கடிக்க வேண்டும் என்கிற முனைப்போடு தன்னுடைய ரசிகர் மன்றத்தினரை களமிறக்கி தீயாய் வேலை செய்தார் தளபதி. அதன் பலனாக 50-ல் 43 தொகுதிகளை தட்டி தூக்கியது அதிமுக.
இதையடுத்து ஜெயலலிதா முதல்வர் ஆனதும், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியே வந்த விஜய், செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவை முதல்வர் ஆக்கியதற்கு ஒரு அணிலாக இருந்து உதவியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருந்தார். பின்னர் பட விழா ஒன்றில் விஜய் கலந்துகொண்டபோது, அங்கு வந்திருந்த சீமான், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திவிட்டு எவ்வளவு அமைதியா உட்கார்ந்து இருக்கார் பாருங்க என விஜய் பற்றி தன் பங்கிற்கு கொளுத்திப்போட்டுவிட்டு சென்றார் சீமான்.
இதையும் படியுங்கள்... இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மேட்சில் ‘விடாமுயற்சி’ அப்டேட்... மீண்டும் அலப்பறையை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்
இப்படி அதிமுக-வின் வெற்றி விஜய்யால் தான் நடந்தது போல் பேச்சு அடிபட்டதை கேட்டு டென்ஷன் ஆன ஜெயலலிதா, பின்னர் படிப்படியாக விஜய்க்கு எதிராக தனது அரசியலை செய்யத் தொடங்கினார். அதன் முதல் அடி தான் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த எஸ்.ஏ.சியை பதவியில் இருந்து நீக்கியது. இதன் பின்னணியின் அதிமுக-வின் உள்ளடி வேலைகளும் நடந்தன. அதுமட்டுமின்றி விஜய்யின் வேலாயுதம் படத்தை அடிமட்ட விலைக்கு வாங்கி தன்னுடைய பவரை காண்பித்தார் ஜெ.
அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலைவா படத்தில் டைம் டூ லீடு என்கிற கேப்ஷனோடு களமிறங்கினார் விஜய். இதனால் கடுப்பான ஜெயலலிதா அப்படத்தை திரையிட முடியாதபடி செய்துவிட்டார். பின்னர் இந்த பிரச்சனை குறித்து சமாதானம் பேச விஜய் கொடநாட்டுக்கே சென்றார். ஆனால் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்காமல் வாசலிலேயே நிற்க வைத்து திருப்பி அனுப்பிவிட்டார் ஜெயலலிதா. பின்னர் ஜெயலலிதாவுக்காக ஒரு வீடியோ வெளியிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார் விஜய்.
vijay
ஜெயலலிதா தன்னை இப்படி அலைய வைத்து அவமதித்ததை மனதில் வைத்துக் கொண்டிருந்த விஜய் அந்த ஆத்திரத்தை எல்லாம் சர்காரில் தீர்த்துக் கொண்டார். அப்படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமி கேரக்டருக்கு ஜெயலலிதாவின் ஒரிஜினல் பெயரான கோமளவல்லி என பெயரிட்டு இருந்ததோடு மட்டுமின்றி அந்த படத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தரையில் போட்டு உடைத்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார் விஜய். அரசியலுக்கு வரும் முன்னரே இப்படி சைலண்டாக அரசியல் வாதிகளை அட்டாக் பண்ணிய விஜய், இனி அரசியலுக்கு வந்தால் என்னென்ன செய்யப்போகிறாரோ என்பது புரியாத புதிராக உள்ளது.
இதையும் படியுங்கள்... இமயமலை கிளம்பினார் ரஜினிகாந்த்! ஜெயிலர் ரிவ்யூ.. சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சூப்பர்ஸ்டார் அளித்த பதில் இதோ